பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

(க-ரை) கள்ளினை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்பவர் உள்ளுரில் வாழ்பவரால் உள் நிகழ்வது உய்த்துணரப்பட்டு எப்போதும் நகுதல் செய்யப்படுவார்.

8. களித்தறியேன் என்பது கைவிடுக கெஞ்சத்து

ஒளித்தது உம் ஆங்கே மிகும். 9.28 (ப-ரை) களித்து - கள்ளினை மறைந்துண்டு , அறியேன் - உண்ணாதபோது கள்ளுண்டறியேன், என்பது. என்று கூறுவதை, கைவிடுக - நீக்குக, நெஞ்சத்து - மனத் தில், ஒளித்தது . மறைத்து வைத்த குற்றமும், ஆங்கே - முன்னைய அளவில், மிகும் - பன்மடங்கு மிகுந்து வெளிப் படும்.

[க-ைர) கள்ளினை மறைந்துண்டு, உண்ணாதபோது யான் கள்ளுண்டறியேன்" என்று கூறுதலை நீக்குதல் வேண்டும். கள்ளுண்டபோது நெஞ்சத்தில் ஒளித்த குற்ற மும் மிகுந்து வெளிப்பரப்புவதாகும்.

9. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇயற்று. 929 (ப.ரை) களித்தானை - கள்ளுண்டு களிப்பவனுக்கு, காரணம் - ஆகாதென்று காரணம், காட்டுதல் - காட்டமும் படுதல், கீழ் நீர் . நீரினுள்ளே, குளித்தானை மூழ்கிய ஒரு வனை, மற்றவன்) தீத்துரி இயற்று-விளக்கினால் தேடுவதை

ஒக்கும். r

(கரை) கள்ளுண்டு களிப்பவனிடம் இது ஆகாது” என்று காரணங்காட்ட முற்படுதல், நீரினுள் மூழ்கிய

ஒருவனை விளக்கினால் தேடுவது ஒக்கும்.

10. கள்.உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு, 930 (ப-ரை) கள் . கள்ளினை, உண்ணா.உண்ணாதிருந்த, போழ்தில் - சமயத்தில், களித்தானை - கள்ளுண்டவனை,