பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

ஐந்தினது வகைகளை, தெரிவான் கட்டே - தெரிந் துணர்பவன் அறிவின் கண்ணதே, உலகு - உலகம் உள்ள

தாகும்.

|க-ரை) சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்ற ஐந்தின் கூறுபாட்டினை ஆராய்பவனின் (முனிவரின்) அறிவினிடத்தே உள்ளதாம் உலகம்.

8. நிறைமொழி மாந்தர் பெருமை கிலத்து

மறைமொழி காட்டி விடும். |ப-ரை) நிறை - பொருளும் பயனும் நிறைந்த மொழி - மொழிகளையுடைய, மாந்தர் பெருமை - முனிவர்களுடைய பெருமையினை, நிலத்து. உலகில், மறை மொழி - அவர்கள் ஆணையாகச் சொல்லும் சொற்களே,

காட்டிவிடும் - கண் கூடாகக் காட்டும்.

(கரை) பயன் நிறைந்த மறைமொழி எனப்படும் சொற்களைச் சொல்லும் முனிவர்களுடைய பெருமையினை அவர்கள் ஆணையாகச் சொல்லும் அச்சொற்களே (மறைமொழி) காட்டிவிடும்.

9. குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

(ப-ரை) குணம் - மெய்யுணர்வான சீரிய குணம்: என்னும் - என்று சொல்லப்பட்ட, குன்று-குன்றின் மீது, ஏறி-ஏறி,நின்றார் . நின்ற முனிவர்களுடைய, வெகுளி - சினம், (கோபம்) கணமேயும் . தான் உள்ள அளவு கண நேரமே யானாலும், காத்தல் - வெகுளப்பட்டவரால் அதனைத் தடுத்தல், அரிது - முடியாததாகும்.

(க-ரை) உயர்ந்த குணமென்னும் குன்றின்மேல் நின்ற

...முனிவர்களுடைய கோபம், இருப்பது கணநேரமேயானா

லும் கோபிக்கப்பட்டவர்களால் அக்கோபம் தடுப்பதற்கு

முடியாததாகும். -