பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை. 985.

|ப-ரை ஆற்றுவார்.செயலைச் செய்து முடிப்பவரது. ஆற்றல் - வலிமையானது ! யாதெனில் பணிதல் - அத்ர் கானவர்களைத் தாழ்ந்து பணிந்து துணையாக்கிக் கொள்ளுதல், சான்றோர் - சான்றோர்கள், மாற்றாரை . பகைவரின், மாற்றும் - பகைமையை யொழிக்கும், படை . கருவியும், அது - அதுவேயாகும்.

(கரை) ஒரு செயலினைச் செய்து முடிப்பவரது வலிமை என்னவென்றால் அதற்குத் துணை பாவாரைப் பணிந்து கூட்டிக்கொள்ளுதலாகும். சால்புடையார் தம் பகைவரின் பகைமையொழிக்கும் கருவியும் அதுவேயாகும்.

6. சால்பிற்குக் கட்டளை யாது.எனின் தோல்வி

துலைஅல்லார் கண்ணும் கொளல். 986

ப-ரை சால்பிற்கு - சால்பாகிய பொன்னினை அளந்தறிவதற்கு, கட்டளை - உரைதல் என்னும் செயல், பாது . எது, எனின் - என்றால், தோல் வி - தோல்வியினை, துலை - தமக்குச் சமமாக அல்லார் கண்ணும்.இல்லாதவர் களிடத்திலும், கொளல் ஏற்றுக் கொள்ளுதலாகும்.

(க-ரை) சால்பாகிய பொன்னினை அளந்தறியும் உரை கல்லாகிய செயல் யாது என்றால், தம்மைவிட உயர்ந் தாரிடம் கொள்ளுவதாகிய தோல்வியை இழிந்தார் மாட்டும் கொள்ளுதலாகும். .

7. இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. 987

|ப-ரை) இன்னா செய்தார்க்கும் . துன்பம் செய்தவர் களுக்கும், இனியவே . இனியவற்றையே, செய்யாக்கால் - செய்யாமற் போனால், சால்பு . சான்றாண்மை என்பது,