பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

2. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்

செம்பாகம் அன்று பெரிது. 1092

fப-ரை) கண் . இப்பெண்ணினுடைய கண்கள், களவு. கலாவுத் தன்மையில் யான் காணாமல், கொள்ளும் . என் மேல் நோக்குகின்ற, சிறு - சிறிய, நோக்கம் - நோக்கானது, காமத்தின் . மெய்யுறு புணர்ச்சியின், செம்பாகம் - ஒத்த பாதியளவு, அன்று . அல்ல, பெரிது - அதனை விடப் பெரி தாகும்.

(க-ரை! இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற சிறிய நோக்கம் மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதியன்று. அதனினும் மிகும்.

3. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் யாப்பினுள் அட்டிய ர்ே. 1093

(ப.ரை நோக்கினாள் யான் காணாத போது என்னை நோக்கியவள், நோக்கி - என்னை நோக்கி, இறைஞ்சினாள் மனதில் ஒன்றை நினைத்து நாணத் துடன் குனிந்தாள், அஃது - அச்செயலின் குறிப்பு, யாப்பி னுள் - எங்களிடையே தோன்றிய காதற்பயிர் வளர அதற்கு, அவள் - அப்பெண், அட்டிய - ஊற்றிய, நீர் . நீராக இருந்தது.

(கரை) ய ா ன் நோக்காதிருக்கும் போது அவள் என்னை அன்போடு நோக்கினாள். நோக்கி ஒன்றனை மனதிற் கொண்டு நாணத்துடன் தலை குனிந்தாள். அக் குறிப்பு எங்களிடம் உண்டான அன்பாகிய பயிர் வளர நீர் வார்த்தது போலாயிற்று.

4, யான்நோக்கும் காலை கிலன்கோக்கும் நோக்காக்கால் தான்கோக்கி மெல்ல ககும். - 1094 (ப-ரை) யான் . நான், நோக்குங்காலை . அவளை நோக்கும்போது, நிலன் . அவள் குனிந்து நிலத்தினை,