பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

509

4. யாமும் உளேங்கொல் அவர்கெஞ்சத்து எம்கெஞ்சத்து ஓஒ உளரே அவர், 1204

(ப-ரைi எம் . எம்முடைய, நெஞ்சத்து - மனத்தில். அவர், நம்முடைய காதலர், ஒஒஉளரே . எந்த நேரமும் இருந்து கொண்டே இருக்கின்றார் (அவ்வாறே) அவர் - அவருடைய, நெஞ்சத்து - மனதிலும், பாமும் உனேங் கொல் - நாமும்.இருக்கின்றோமா?

|க-ரை எம்முடைய நெஞ்சத்தில் காதவர் எப் போதும் இருந்துகொண்டே இருக்கின்றார். அதுபோலவே அவருடைய நெஞ்சத்தில் நாமும் இருந்து கொண்டு இருக்கிறோமோ?

5. தம்கெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்கெஞ்சத்து ஒவா வரல். 1205

(ப.ரை) தம் தம்முடைய, நெஞ்சத்து - மனதிற்குள், எம்மை . எம்மை, கடி - வராமல் காவல், கொண்டார் - காவல் புரியும் காதலர், எம் - எம்முடைய, நெஞ்சத்து மனதிற்குள், ஒவா - நீங்காமல், வரல் - வருவதற்கு, நானார் கொல் வெட்கம் அடையாரோ?

(க-ரை காதலராகிய அவருடைய மனதில் காம் இருக்கக் கூடாதென்று காவல் செய்கின்ற அவர் எம்முடைய நெஞ்சத்திற்குத் தவறாமல் வ ரு த ற் கு வெட்கப்பட மாட்டாரோ?

6. மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்

உற்றநாள் உள்ள உளேன். $206

!ப-ரை) யான் அவரொடு - நான் காதலராகிய அவரோடு, உற்ற . இன்புற்றிருந்த, நாள் - நாளினை, உள்ள உளேன் - எண்ணிக் கொண்டிருப்பதால் உயிரோடு இருக்கின்றேன், மற்று - அப்படி இல்லையென்றால், யான் என்னுளேன் - நான் எதனால் உயிர் வாழ்ந்துகொண் டிருப்பேன்? ரீமன் - ஒழியிசை, ஓ - அசைநிலை)