பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

7. கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. (ப-ரை) உலகம் - உலகத்தின் மேலோர்கள், நடுவாக . நடுவு நிலைமையில் வாழ்ந்து, நன்றிக்கண் . அறத்திலிருந்து வழுவாமல், தங்கியான் தாழ்வு - இருப்பவனது தாழ்வுண் டாக்கும் வறுமையினை, கெடுவாக - தீமையான வறுமை யென்பதாக, வையாது - வைத்துக் கருத மாட்டார்கள்.

(க-ரை) நடுவு நிலைமையில் நின்று அறத்திலிருந்து வழுவாமல்நின்றவனுடைய வறுமையினைப் பெரியோர்கள் வறுமையாக வைத்து நினைக்க மாட்டார்கள்.

8. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி,

(ப-ரை) சமன் - சம மா க, செய்து - இருந்து, சீர்தூக்கும் அளவினைக் காட்டுவதாகிய, கோல்போல் . துலாக்கோல்போல, அமைந்து . நன்கு அமைந்திருந்து, ஒருபால் - ஒருபக்கமாக, கோடாமை - கோணுதல்செய்யா திருப்பது, சான்றோர்க்கு அணி - பெருந்தகையாளர்களுக்கு அழகாகும்.

(க-ரை) முன்பு சமமாக இருந்து வைத்த பாரத்தினை அளவு காட்டுவதாகிய துலாக்கோல்போல், நன்கு அமைந் திருந்து ஒரு பக்கமாகச் சாயாமலிருப்பது பெரியோர்களுக்கு

அழகாகும்.

9. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

|ப-ரை) செப்பம் - நடுவு நிலைமை என்பது, சொல் - சொல்லுகிறசொல்லில், கோட்டம் - கோணுதல், இல்லது. இல்லாதிருப்பதாகும், (அதுவும் எப்போது நன்மையென் றால்) உள் - மனத்தில், கோட்டம் . கோணுதல், இன்மை.

தி, தெ.-5 •