பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

(ப-ரை ஒழுக்கம் . ஒழுக்கத்தினை, உடைமை . உடையவனாக இருத்தல், குடிமை - நற்குலத்தினையுடை யவன் என்பதாகும், இழுக்கம் . அவ்வொழுக்கத்தினின்று தவறி விடுதல், இழிந்த இழிவான, பிறப்பாய் விடும் . பிறவியானவன் என்பதாக்கி விடும்.

(க-ரை) ஒழுக்கமுள்ளவனாக இருத்தல் என்பது நற்குடியில் பிறந்துள்ள வன் என்பதற்கு அடையாளமாகும். அவ்வொழுக்கத்திலிருந்து தவறுதல் தாழ்ந்த இழிதொழில் பிறவியானவன் என்பதாக்கிவிடும்.

4. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.

(ப-ரை) ஒத்து - மறை நூலினை (வேதத்தினை) மறப்பினும் - மறந்து விட்டான் என்றாலும், கொளல் - திரும்பவும் ஒதிக்கொள்ளுதல், ஆகும்.முடியும், பார்ப்பான்அதனைப் படிப்பவன், பிறப்பு ஒழுக்கம் - மக்கட் பிறப்புக் குரிய ஒழுக்கத்தில், குன்றக்கெடும் - குறைபட்டு விடுவா னே யானால் கெட்டுவிடுவான்.

(க-ரை) கற்ற வேதத்தினை மறந்து விட்டான் என்றாலும் திரும்பவும் ஒதிக் கொள்ளலாகும். பார்ப்பான் மக்கட் பிறப்புக்குரிய ஒழுக்கத்திலிருந்து குறைந்து விடுவா னேயானால் கெட்டுவிடுவான்.

5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

(ப-ரை) அழுக்காறு - பொறாமை, உடையான் கண் - உள்ளவனிடத்தில், ஆக்கம் போன்று.செல்வம் (இல்லாதது) போல, ஒழுக்கம் - ஒழுக்கமானது, இலான்கண் . இல்லாத வனிடத்தில், உயர்வு இல்லை - சிறப்பு என்பது இல்லாத தாகிவிடும். -