பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் கோற்பாரின் பின்.

(ப-ரை) .ண்ணாது . உணவு கொள்ளாது (தவம் செய்து), நோற்பார் - துன்பங்களைப் பொறுத்து நோன்பு நோற்பவர், பெரியர் - பெரியவர்களாகிய முனிவர்கள் ஆவார்கள், (அவர்கள் பெரியர் ஆவதும்) பிறர் சொல்லும். மற்றவர் சொல்லுகின்ற, இன்னா - துன்பம் தருகின்ற, சொல் - சொற்களை, நோற்பாரின் - பொறுத்துக் கொள்ளு வோரின், பின் - பின்னேயாகும் என்பதாம்.

இக-ரை) உண்ணாமல் நோன்பு நோற்றுத் தவம் செய் பவர்கள், எல்லோரினும் பெரியவர்களாவார்கள், அவர்கள் பிறர் சொல்லும் துன்பமான சொற்களையும் பொறுத்துக் கொள்ளுபவர்களுக்கு அடுத்தே பெரியவர்களாக மதிக்கப் படுவார்கள்.

17. அழுக்காறாமை (பொறாமை என்னும் தீயகுணம் இல்லாதிருத்தல்)

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் கெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

(ப-ரை) ஒருவன் - ஒருவன், தன் - தன்னுடைய, நெஞ்சத்து - நெஞ்சத்தில்,அழுக்காறு இலாத - பொறாமை இல்லாததான, இயல்பு - இயல்பினை (தன்மையினை} ஒழுக்கு - ஒழுக்கமுடைய, ஆறா - நெறியாக, கொள்க - கொள்ளுதல் வேண்டும்.

(க-ரை) ஒருவன் தன்னுடைய மனத்தில் பொறாமை என்னும் குற்றம் இல்லாத தன்மையினைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும்.