பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு | 10 அதிகாரம் 5 பொச்சாவாமை 53. பெரிய உவகையால் மகிழ்ச்சியடைந்து அதனால் கொள்ளும் மறதி வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமை தருவதாகும். - 532 நாள்தோறும் விடாமல் பெருகிவரும் வறுமைத் துன்பம் ஒருவனது அறிவைக் கெடுத்தல்போல் மறதி அவனது புகழைத் தவறாமல் கெடுத்து விடும். 533. மறதியால் சேர்ந்து நடப்பவர்கட்குப் புகழுடன் வாழும் தன்மை இல்லை. அஃது உலகிலுள்ள எத்தகைய நூலோர்க்கும ஒப்ப முடிந்த முடிவாகும். 54. உள்ளத்தில் அச்சம் உடையவர்கட்கு புறத்தில் அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்கட்கு நல்ல செல்வ் நலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை. 535 வரும் இடையூறுகளை முன்னதாகவே அறிந்து காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன். பின்னர் அவை வந்துற்ற போது தன் பிழையை நினைந்து வருந்துவான். 56. யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சேர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால் அதற்கு ஒப்பான நன்மை தருவது வேறு எதுவும் இல்லை. 53. மறவாமை என்னும் கருவி கொண்டு எதனையும் போற்றிச் செய்தால் செய்வதற்கு அரியன என்று கருதிக் கைவிடும் செயல்களும் இல்லையாகும். 58. சான்றோர்கள் சிறந்தவையாகப் போற்றிச் சொன்ன கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுபிறப்பிலும் நன்மை இல்லை. 539. தாம் தம் மகிழ்ச்சியினால் செருக்குக் கொண்டு &l-off மறந்திருக்கும்பொழுது முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினால் சோர்ந்து கெட்ட்ழிந்தவர்களை நினைத்துப்பார்க்க வேண்டும். 540. ஒருவன் தான் எண்ணியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால் அவன் கருதியதை அடைதல் எளிதாக அமையும்.