பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு #24 அதிகாரம் 81 மடியின்மை 51. ஒருவன் வந்து தோன்றிய குடி என்னும் மங்காத விளக்கு அவனது சோம்பல் என்னும் மாசு படரப்படர, ஒளி மங்கிக் கெட்டு விடும். - 802. தாம் பிறந்த குடியை மேன்மேலும் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விழைகின்றவர்கள். சோம்பலை அறவே போக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும். 65. அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவுற்றவன் பிறந்த குடியின் பெருமை அழிந்து அவன் அறிவதற்குமுன் அழிந்துவிடும். 604. சோம்பலில் ஆழ்ந்து சிறந்த முயற்சியில் ஈடுபடாமல் வாழ்கின்றவருடைய குடிப்பெருமையும் கெட்டுக் குற்றமும்நாளுக்கு நான் பெருகும். 605 காலம் நீட்டித்தல், மறதி சோம்பல், அளவு மீறிய உறக்கம் ஆகிய இந்நான்கும் அழிந்து விடக்கூடிய இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகும். 806 நாடாளும் மன்னனின் தொடர்பு தானே இயல்பாக வந்து அமைந்தாலும் சோம்பலையுடையவர்கள் அதனால் சிறந்த பயனை அடைய முடியாது. 807, சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி யற்றவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொற்களைக் கேட்கும் நிலைமையை அடைவர். கி08 நல்ல குடியில் வந்து பிறந்தவனிடம் சோம்பல் என்பது வந்து சேர்ந்து விடுமானால் அஃது அவனை அவனது பகை வர்க்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும். 809, ஒருவன் தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்துவிடக் கூடுமானால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் நேரிட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கி விடும். 60. தன் திருவடியில் உலகத்தைத் திருமால் தாவி அளந்த எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத வேந்தன் ஒருசேரப் பெற்று விடுவான்.