பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 22 அதிகாரம் 105 நலகுரவு 1041 ஒருவனுக்கு வறுமையைப்போலத் துன்பம் தருவது எது என்று வினவினால், அந்த வறுமையைப்போல் துன்பம் தருவது அந்த வறுமை ஒன்றே ஆகும். 1042. வறுமை என்று சொல்லப்படும் ஒரு பாவி ஒருவனை அணுகிவிட்டால் அவனுக்கு இம்மை இன்பமும் மறுமை இன்பமும் இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும். - 103. வறுமை எனப்படும் ஆசை நிலை ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழைமையான குடிப்பண்பையும் புகழை யும் ஒருசேரக் கெடுத்தொழிக்கும். 104. இழிவான சொல் பிறவாத நல்ல குடும்பத்தாரிடம் அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையை வறுமை உண்டாக்கி விடும். 1045 வறுமை என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றினுள்ளே பலவகையாக வேறுபட்டுள்ள அனைத்துத் துன்பங்களும் சென்று விளைந்திடும். 1048 நல்ல நூற்பொருளைத் தெளிவாக உணர்ந்து எடுத்துச் சென்னபோதிலும் வறுமைப்பட்டவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இன்றிப் பயன்படாமல் போகும். 1041. அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனை அடைந் தால் ஈன்றெடுத்த அன்னையாலும் அவன் அயலானைப் போலக் கருதிப் புறக்கணித்து நோக்கப்படுவான். 1048. நேற்றும் கொலை செய்ததுபோல் துன்பம் செய்தவறுமை இன்றும் என்னிடம் வருமோ வந்தால் இனியான்யாது செய்வேன்? 1049, மந்திர மருந்துகளின் துணையால் ஒருவன் நெருப்பினுள் கிடந்து உறங்கவும் முடியும், ஆனால் வறுமை வந்துற்றபோது எந்த வகையாலும் கண்மூடி உறங்குதல் அரிது. 1050. நுகரும் பொருள் இல்லாத வறியவர் செய்யக்கூடியது முற்றத்துறத்தலாகும். அங்ஙனம் செய்யாதிருப்பது பிறர் இல்லத்து உப்பிற்கும் கஞ்சிற்கும் தாம் எமனாவதே யாகும்.