பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 258 அதிகாரம் 26 நிறையழிதல் 125 நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை எனப்படும் கதவைக் காமம் ஆகிய கோடரி தகர்த்து விடுகின்றது. 1252 காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அஃது எல்லோரும் உறங்கும் நள்ளிரவிலும் என் நெஞ்சத்தை ஏவல் செய்து ஆள்கின்றது. 1253, யான் காமத்தை என்னுள் மறைக்க முயல்வேன். ஆனால், அதுவோ என் குறிப்பின்படி அடங்கி நிற்காமல் தும்மல் வெளிவருதல்போல் தானே வெளிப்பட்டு விடுகின்றது. 1254. யான் இதுகாறும் நிறையோடு இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், என் காமம் என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது. 1255. நம்மை வெறுத்து அகன்றவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் நிறையுடைமை காமநோய் உறாதார் அறிவதொன்றன்றி உற்றவர் அறியும் தன்மையது அன்று. 1256 நம்மை வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் யாம் செல்ல விழையும் நிலையிலிருப்பதால் எம்மைப் பற்றிய இந்தக் காம நோயானது எத்தன்மை உடையதோ 125 பாம் விரும்பிய காதலரும் காமத்தால் நமக்கு விருப்ப மானவற்றைச் செய்வாரானால், நாமும் நாணம் எனப்படும் ஒரு பண்பையும் அறியாமலிருப்போம். * 1258. நம்முடைய நிறையாகிய அரணை அழிக்கும் படை யாக இருப்பது, பல பொய்களில் வல்ல கள்வரான காதலரின் பணிவான சொற்கள் அன்றோ? 1259, ஊடுவோம் என்று நினைத்துக் கொண்டு சென்றோம்; ஆனால் எம் நெஞ்சம் எம்மை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு அவரைத் தழுவினோம். 1280. தீயிலே கொழுப்பை இட்டாற்போல் உருகும் நெஞ்சை யுடையவரான எம் போன்றவர்க்குப் புணரும்போது இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் உறுதிதான் உண்டாகுமோ?