பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 258 அதிகாரம் 127 - அவர்லயின் விதும்பல் 125. அவர் வருவாரென வழியையே பார்த்துப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து அழகு கெட்டன. அவர் பிரிந்த நாட் களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின. - 125% தோழி! காதலரின் பிரிவல் துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்தால், என் தோள்கள் அழகு கெட்டு மெலியும் தோள்மேல் அணிந்துள்ள அணிகள் கழலும்படி நேருங் 1253. வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளி நாட்டுக்குச் சென்ற காதலர். திரும்பி வருதலைக் கான் விரும்பியே இன்னும் யான் உயிரோடுள்ளேன். . 1284, முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து பிரிந்து சென்றவரின் வருகையை நினைத்து, என் நெஞ்சம் மரக் கிள்ைகள்தோறும் ஏறிப் பார்க்கின்றது. 125 என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலை நோயும் தானாகவே நீங்கிவிடும். 286 என் காதலன் ஒருநாள் மட்டிலும் என்னிடம் வரு வானக அங்ஙனம் வந்தபிறகு என் துன்பநோய் எல்லாம் தீரும் படியாக நான் அவனோடு இன்பத்தைப் பருகுவேன். 26. என் கன்போன்ற காதலர் `ಿ யான் அவ ரோடு ஊடுவேனே? அல்லது தழுவிக் கொள்வேனோ? அல்லது ஆவலோடு கலந்து இன்புறுவேனே? என்ன செய்வேன்? 1288 மன்னன் இச்செயலில் முனைந்து நின்று வெற்றி பெறு வானக அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அன்று வரும் மாலைப் பொழுதில் அவனோடு விருந்தை நுகர்வேன். 269, தொலைவிட்த்திற்குப் பிரிந்து சென்ற காதலர் திரும்பி வருநாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிருக்கு ஒருநாள் ஏழுநாள் போல் - நெடிதாகக் கழியும். 120.துன்பத்தைத் தாங்காமல், காதலி மனம் உடைந்து இறந்து விட்டால் அவள் நம்மைத் திரும்பப் பெறமுடிவதனால் என்ன? பெற்றுவிட்டால் என்ன? பொருந்தினால்தான் என்ன?