பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு j6 அதிகாரம் 8 அன்புடைமை 11 அன்புடையாரின் துன்பத்தைக் கண்டபோது ஒருவர் கண்களிலிருந்து சிந்துகின்ற சிறு கண்ணிரே உள்ளத்தின் அன்பைப் பலரும் அறியப் புலப்படுத்தும். ஆதலால் அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் இல்லை. 72 அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையும் தாமே அநுபவிப்பர். அன்புடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். . 13. அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தியிருக்கும் உறவு. அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயனே என்று கூறுவர் அறிஞர். 14 அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் பண்பை நல்கும். அஃது எல்லோரிடத்திலும் நட்பு எனப்படும் அளவு கடந்த சிறப்பையும் தரும். 1. உலகில் இன்பம் உற்று வாழ்கின்றவர் எய்தும் சிறப்பு அன்புடையவராகப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயனே என்று பகர்வர். 16: அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர் அறியாதார் ஆராய்ந்து நோக்கினால் வீரச் செயல்களுக்கும் அதுவே துணையாக இருப்பது புலனாகும். 7. எலும்பற்ற உடலோடு வாழ்வும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல அன்பற்ற உயிரை அறம் வருத்தும். 18 அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை வளமற்ற பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தல் போன்றதாகும். 79. உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு அதன் புறத்து உறுப்புகளால் யாதொரு பயனும் இராது. 80. அன்பின்வழி இயங்கும் உடம்பே உயிர்நிலை பெறும் உடம்பாகும் அன்பு இல்லாதவர் உடல் எலும்பைத் தோல் போர்த்த கூடேயாகும்.