பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 34. அதிகாரம் 7 அழுக்காறாமை 18. ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாதிருக்கும் நல்லியல்பினையே தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளல் வேண்டும். - 162 எவரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கும் குணத்தை ஒருவன் பெற்றால் அவன் பெறுதற்கரிய பேறுகளுள் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை. 18. தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப் படுவான். 164, பொறாமைப் படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை அறிந்து அறிவாளர் பொறாமை காரணமாக அறமல்லாத வற்றைச் செய்யார். 15. ப்ொறாமை உடையவருக்கு வேறு பகை வேண்டா, அஃது ஒன்றே போதும். பகைவர் கேடு செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டதைத் தந்து விடும். 166.ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பார்த்து பொறாமைப் பட்டால் அவனுடைய சுற்றம் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் கெட்டொழியும். 16. பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் பொறுக் தாமல் அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டித் தான் நீங்கி விடுவாள். 168. பொறாமை எனப்படும் ஒப்பற்ற பாவி தன்னை உடைய வனுடைய செல்வத்தையும் கெடுத்து அவனைத் தீயவழியிலும் உய்த்து விடும். - - 169, பொறாமை கொண்ட நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத்தக்கவை. .ே உலகில் பொறாமையினால் பெருமை அடைந்தவரும் இல்லை. பொறாமை இல்லாததனால் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.