பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 62 அதிகாரம் 31 வெகுளாமை 301.செல்லக்கூடிய இடத்தில் சினம் உண்டாகாமல்தடுப்பவனே அதனை அடக்கியவனாவான் செல்லக்கூடாத இடத்தில் அதனை அடக்கினால் என்ன? அடக்காவிட்டால் என்ன? 302 சினம் தன்னைவிட வலியவர்மீது சென்றால் அது தனக்கே தீங்கு பயக்கும் அது தன்னை விட மெலியவர்மீது சென்றால் அதனிலும் தீமையானது வேறு இல்லை. 303 எவரிடத்திலும் சினங்கொள்ளாமல் அவரது தீச்செயலை மறந்துவிட வேண்டும் தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே வந்து சேரும். 304. முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தைவிட ஒருவனுக்கு வேறு பகை இல்லை. 305. ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க. அவ்வாறு காக்கவில்லையாயின் அச்சினம் அவனையே கொன்றுவிடும். 306 சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் இயல்புடைய நெருப்பு தன் இனத்தார் என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்து விடும். 30 தனது வலிமையைக் காட்டுவதற்குச் சினத்தைக் கருவி யாகக் கொண்டவன் அதனால் அழிதல், நிலத்தை அறைந்தவ னுடைய கை துன்பம் அடைதலின்றுதப்பாதது போல உறுதியாகும். 308 பல சுடர்களையுடைய பெரு நெருப்பில் தோய்ந்தற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும் கூடுமானால் அவன்பால் சினம் கொள்ளாதிருத்தல் நன்று. 309, ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப்பற்றி நினையா திருப்பானானால், அவன் நினைத்தவை எல்லாம் உடனே அவனை வந்தடையும், 1ே0. அளவு கடந்து சினத்தில் ஈடுபட்டவர் இறந்தாரோடு ஒப்பர் சினத்தைக் கைவிட்டவரே முற்றுந் துறந்த மேலோரோடு ஒ:பா.