பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 66 அதிகாரம் 33 கொல்லாமை 32. அறச்செயல் எது என்றால் எந்த ஓர் உயிரையும் கொல் லாமையாகும் கொல்லும் செயல் அறமல்லாத பிற தீச் செயல்கள் எல்லாவற்றையும் விளைவிக்கும். 322 உள்ள உணவைப் பலரோடு பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததாகும். 323. ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த ஓர் உயிரையும் கொல் லாமையாகும். அதற்கு அடுத்ததாக நல்லறம் எனக் கருதப்பெறுவது பொய்யாமையாகும், 324 நல்ல வழி என்று அறநூல்கள் கூறுவது எது என்றால் எந்த ஒர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினை நினைக்கும் நெறியேயாகும். 325. வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்ேசித் துறந்த வர்கள் எல்லாரிலும் கொலைப் பாவத்திற்கு அஞ்சிக் கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள் ஆவர். 328. கொல்லாமையாகிய அறத்தைக் கடைப்பிடித்து ஒழுகு பவனது வாழ்நாள்மேல் உயிரைத்தின்னும் கூற்றுவனும் கண்விைக்க் Ածն-Լ-Յ5:. 32. தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கும் நிலை ஏற்படினும் அதனைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரைப் போக்கும் பாவச்செயலைச் செய்யலாகாது. - 323. கொலையைப் புரிவதால் விளையும் ஆக்கம் பெரிதாக இருப்பினும், சான்றோர்க்கு அத்தகைய ஆக்கம் மிகவும் இழிவானதாகும். 329. கொலை செய்வதையே தொழிலாக உடைய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர். 30. நோய் மிகுந்த உடம்புடன் உயிரும் போகாமல் வறுமையால் வருந்தித் துன்புறுகின்ற வாழ்வையுடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்பினின்றும் நீக்கியவர்களே என்று அறிஞர் கூறுவர்.