பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 101 44. குற்றம் செய்யாது விலக்கல் அகந்தையும் சினமும் இழி தன்மையும் ஆகிய குற்றங்கள் இல்லாதவரது வளர்ச்சி பெருமிதத்தன்மை யுடையது. 431 பிறர்க்கு உதவாத கருமித்தன்மையும் சிறப்பில்லாத வறட்டு மானமும் மாண்பற்ற மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றங்களாம். .432 பழிக்கு நாணுபவர், தினையளவு சிறிய குற்றம் நேரிடினும் அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி அஞ்சுவர். 433 ஒருவர்க்கு அழிவைத் தரும் பகை குற்றம் புரிதலே; ஆதலின், அதே குறிக்கோளாக நின்று குற்றத்தினின்றும் காத்துக் கொள்க. 43.4 தீங்கு வருவதற்குமுன் காத்துக் கொள்ளாதவனது வாழ்வு, நெருப்பின் எதிரே உள்ள வைக்கோல் போர் போல் கெட்டொழியும். 435 முதலில் தன் குற்றத்தைப் போக்கிப் பிறகு பிறர் குற்றத்தைக் கண்டு போக்கத் தொடங்கின், அரசனுக்கு என்ன தீங்கு நேர முடியும்? 436 செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்யாமல் கருமித்தனமாய் இறுக்கி வைத்திருப்பவனது செல்வம் தப்பி நிலைக்கும் தன்மையின்றிக் கெட்டுவிடும். 437 உள்ளம் பொருளை இறுகப் பற்றிக் கொள்ளுதலாகிய கருமித்தன்மை, எக்குற்றத்தோடும் இணைத்து எண்ணப்படக் கூடிய தல்லாத ஒரு பெருங் குற்றமாம். 4 38 எப்போதும் தன்னைத்தானே மேலாகப் பெருமை யடித்துக் கொள்ளலாகாது. நன்மை தராத குற்றமான செயலை விரும்பவும் கூடாது. 4 39 நுகர விரும்பிய பொருள்களைத் தான் விரும்பியதைப் பிறர் அறியாதபடி நுகர்ந்தால், கெடுக்கும் பகைவரின் போர் நூலறிவு பயனற்றுப் போகும். 4 4 O