பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 131 59. ஒற்றரால் உளவு (வேவு) பார்த்தல் ஒற்றரால் உளவு பார்த்தலும் புகழ்மிக்க அரசியல் நூலும் ஆகிய இரண்டும் தனக்குக் கண்கள் என அரசன் தெரிந்து கொள்க. 581 எல்லோருக்கும் என்னென்ன நிகழ்கின்றனவோ அவற்றையெல்லாம் எப்போதும் ஒற்றர் வாயிலாக விரைவில் அறிதல் வேந்தனுக்குக் கடமை. 582 ஒற்றரைக் கொண்டு வேவு பார்த்து உண்மைப் பயன் உணராத அரசன் வெற்றி பெறுவதற்கு உரிய வாய்ப்பு இல்லை. - - 583 அரச வேலை பார்ப்பவர், தம் உறவினர், தமக்கு வேண்டாத பகைவர் என்று இப்படியாக எல்லோரையும் ஆராய்ந்து உளவு பார்ப்பவனே ஒற்றனாவான். 584 யாரும் ஐயப்படாத கோலத்துடன், எதற்கும் அஞ்சாமல், எங்கும் மறை பொருளை வெளிவிடாமல் செயலாற்ற வல்லவனே ஒற்றன். 585 துறவிகள் போல் கோலம் பூண்டவராய், தம் வன்மைக்கு மீறியும் வேவு பார்த்து, இடையிலே எதிரிகள் என்ன செய்தாலும் சோராதவரே ஒற்றர். - 586 மறைவாக உள்ள செய்திகளையும் வினவி அறிய வல்லவராய், அறிந்த செய்திகளை ஐயத்திற்கு இடமின்றித் துணிபவரே ஒற்றர். 587 ஓர் ஒற்றன் வேவு பார்த்து வந்து தெரிவித்த செய்தியை யும் மற்றும் ஓர் ஒற்றனால் வேவு பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். 588 ஒற்றருக்கு ஒற்றர் தெரிந்து கொள்ளாதபடி ஒவ்வொரு வரையும் தனித்தனியே வேலை வாங்க வேண்டும்; ஒற்றர் மூவர் சொல்வது ஒருசேர ஒத்திருந்தால் நம்பப்படலாம்.589 ஒற்றனுக்கு எந்தச் சிறப்பையும் பலர் அறியச் செய்யலாகாது; செய்தால் அரசன் தானாகவே உள் பொருளை வெளிப்படுத்தியவனாவான். 590