பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 137 62. முயற்சி உடைமை எச் செயலும் செய்வதற்கு அரியது என்று கருதிச் சோராமல் இருக்க வேண்டும். (முயற்சி செய்தால்) முயற்சி பெருமை யளிக்கும். 611 எடுத்த வேலையைக் குறையாக விட்டு நீங்கிய வரை உலகம் விட்டு நீங்கும்; எனவே செயலாற்றுங் கால் இடையிலே செயல் கெடாதபடி முயற்சியுடன் பார்த்துக் கொள்க. 61.2 எல்லார்க்கும் உதவுதல் என்னும் பெருமித நிலை, முயற்சி உடைமை என்னும் தகுதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. 61 3 முயற்சி இல்லாதவன் உதவி செய்தல் என்பது, ஆண்மையற்ற பேடி கையில்ே வாள் ஏந்திப் போர் செய்தாற் போல இல்லாததாகி விடும். 6 1 4 தனக்கு இன்பம் வேண்டாதவனாய் முயன்று செயலாற்றுவதையே விரும்புபவன், தன் சுற்றத்தாரின் துயர் நீக்கித் தாங்கிக் காக்கும் தூண் ஆவான். 615 முயற்சி உடைமை செல்வத்தைப் பெருக்கும்; முயற்சி இல்லாமை ஏழ்மையை நுழைத்து விடும். 616 கரிய மூதேவி சோம்பல் உள்ள இடத்திலே இருப்பாள் என்றும், தாமரை வீட்டாளாகிய திருமகள் முயற்சி உள்ள இடத்தை அடைவாள் என்றும் கூறுவர். 617 நல்ல ஊழ் இல்லாதிருத்தல் எவர்க்கும் பழியாகாது; அறிய வேண்டியவற்றை அறிந்து முயன்று வினை செய்யாதிருத்தலே பழிப்பாகும். 618 ஊழ் வலியால் ஒரு செயல் முற்ற முடியா விட்டாலும், தன் உடலை வருத்தி உழைத்ததற்கேற்ற ஊதியத்தை முயற்சி கொடுத்தே தீரும். 619 சோர்வில்லாமலும் காலம் தாழ்த்தாமலும் முயன்று செயலாற்றுபவர், அச் செயலைத் தடுக்கும் ஊழையுங் கூட அப்பால் தூக்கியெறிவர் 62O