பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 157 72. அரச அவையை அறிந்து அதற்கேற்ப ஒழுகல் சொற் கூட்டத்தைக் கற்றறிந்த தூயவர், அரசவையின் இயல்பறிந்து சொல்ல வேண்டியவற்றை ஆராய்ந்து சொல்வாராக, - 711 மொழி நடையை அறிந்த நன்மை உடையவர், அவையின் சூழ்நிலை அறிந்து எதையும் நன்கு உணர்ந்து சொல்வாராக 712 அவையின் இயல்பு அறியாதவராய்ப் பேசுதலைச் செய்பவர், பேச்சின் திறம் அறியாதவர் ஆவர். அவர் பேச வல்லதும் இல்லை. . 713 அறிவு மிக்கவரின் முன் தாமும் அறிவு மிக்கவராய் நடந்து கொள்ள வேண்டும்; அறிவிலிகள் முன்போ தாமும் வெள்ளைச் சுண்ணாம்பின் நிறம் போல் ஒன்றும் இன்றி வெளுத்துக் காணப்பட வேண்டும். 71.4 பெரியோரிடையே முந்தி முந்திப் பேசாத அடக்கம், நல்லவற்றுக்குள் எல்லாம் நல்லதாகும். 715 பரந்த அறிவு பெற்றுணர்ந்த பெரியோர்முன்பு தவறி நடத்தல், ஆற்று வெள்ளத்தில் நிலை தளர்ந்து சோர்ந்தது போன்றதாம். - 716 பிழையறச் சொற்களை ஆராயவல்ல பெரியோர் அவையிலே, நன்கு கற்றறிந்தவரின் கல்வி புகழொளி வீசும். 717 இயல்பாகவே உணர்ந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்முன் கருத்துக்களை விளக்கிப் பேசுதல், இயற்கையாகவே நன்கு வளரும் பயிரின் பாத்தியில் மேலும் நீர் சொரிந்தது போன்றதாகும். 718 நல்லோர் அவையில் நன்கு பதியுமாறு பேச வல்லவர், புல்லோர் குழுவில் மறந்தும் பேசற்க. 719 தமக்கேற்ற நற்குழுவினர் அல்லாதார்முன் சொற்பொழிவு செய்தல், கழிவுநீர்ச் சேற்றில் கொட்டிய அமிழ்தம்போல் பாழ்படும். 72O