பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரணியல் 163 75 வலிய அரணது இயல்பு எதையும் தாங்கும் ஆற்றல் உடையவர்க்கும் அரண் (காவல் நிலை) இன்றியமையாப் பொருளாம்; ஆற்றல் இன்றி அஞ்சித் தற்காத்துக் கொள்வோர்க்கும் இன்றியமையாதது அது. 74.1 நீலமணியின் நிறமுடைய நீர்நிறை அகழியும், மணல்வெளியும், உயர்ந்த மலையும், அழகிய நிழல்தரும் அடர்ந்த காடும் உடையதே முழு அரணாம். 742 உயரமும் அகலமும் ே அரிய நுட்பங்களும் ஆகிய நான்கும் அமைந்த மதிலையே சிறந்த அரண் என்று உரைப்பர் போர் நூலார். 7.43 காக்கும் வாயில்வழி சிறியதாய், உள்ளே பெரிய இடமுடையதாய், உற்ற ப்கைவன் கண்ட அளவில் அவனது ஊக்கத்தைக் கெடுக்க வல்லதே அரண். 744 பகைவரால் கொள்ள முடியாததாய், நிறைந்த உணவுப் பொருள் உடையதாய், உள்ளிருப்போர் நிலைத்து நிற்றற்கு வசதியான இயல்பினதே அரண். 745 உள்ளிருப்போர்க்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் உடையதாய், உற்ற இடத்தில் உதவக் கூடிய நல்ல மறவர்களையும் உடையதே அரண். 746 பகைவர் சூழ்ந்து முற்றுகையிட்டோ, முற்றுகை நீக்கிப் போர் உள்ளிருப்போரை ஏமாற்றியோ கைப்பற்ற முடியாததே அரண். 747 முற்றுகைத் தொழிலைத் திறமுடன் செய்து முற்றுகை ட்டிருக்கும் பகைவரையும், உள்ளிடத்தைப் பற்றி யிருக்கும் அரசர் அப்பற்றை உறுதியாகக் கொண்டு வெல்லக் கூடிய வகையில் உள்ளதே அரண். 748 பொருமுனையில் பகைவர் அறியும்படி உள்ளிருப்போர் புரியும் போர்வினையால் பெருமிதம் பெற்றுச் சிறந்திருப்பதே அரண். 749 அரண் தான் எத்தகைய சிறப்புக்களை உடையதாயினும், போர்வினைத் திறமையில்லாத மன்னரிடம் இருக்குமாயின் தான் இல்லாது அழியும். 750