பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 187 87. பகைகொள்ளும் சூழ்ச்சித் திறமை நம்மினும் வலியாரிடம் மாறுபாடு கொள்ளுதலை விலக்க வேண்டும்; தம்மைக் காக்க முடியாத மெலியவரிடம் மட்டுமே பகை கொள்ள வேண்டும். 861 அன்பு அற்றவனாயும் சிறந்த துணையில்லாதவனாயும் தானும் வலிமையற்றவனாயும் இருப்பவன் எதிரியின் வலிமையை எவ்வாறு அழிப்பர்ன்? 862 எதற்கும் அஞ்சுபவனாயும் எதையும் நன்கு அறியாத வனாயும் யாரிடமும் பொருத்தப்பாடு இல்லாதவனாயும் யார்க்கும் ஒன்று ஈயாதவனாயும் உள்ளவன் தன் பகைவர்க்கு எளியவனாய்த் தஞ்சம் புகுவான். 863 சினம் நீங்காதவனாயும் நெஞ்சுறுதி இல்லாதவனாயும் உள்ளவன் எப்போதும் எங்கும் எவர்க்கும் எளியவன் ஆவான். 864. செய்வழி ஆராயாதவனாகியும் நல்வாய்ப்பிற்கு உரிய செயல்கள் செய்யாதவனாயும் பழி பாராதவனாயும் பண்பற்றவனாயும் இருப்பவன் தன் பகைவர்க்கு இனிய வெல்லக்கட்டி, 865 ஆராய்ந்து பாராமல் சினங் கொள்பவனாயும் மிகவும் பேராசை உடையவனாயும் உள்ளவனது பகையைப் பேணி ஏற்றுக் கொள்ளலாம். 866 தன்னைச் சார்ந்திருந்து கொண்டே ஒழுங்கற்ற செயல்கள் புரிபவன் பகையை, யாதொரு பொருள் கொடுத்தாவது கட்டாயம் பெறவேண்டும். 867 ஒருவன் நற்பண்பு இல்லாதவனாய்க் குற்றங்கள் பல உடையவனாயின் அவன் தனக்கு நண்பர்கள் இல்லாதவனாகி, பகைவர்க்கு நன்மையாவான். 868 அறிவின்றி எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெறின், அப்பகைவரை அழிக்க விரும்புபவர்க்கு இன்பம் தொலைவில் போகாமல் அண்மையில் கிட்டும். 869 கல்லாதவனாயும் வெகுளுபவனாயும் ஒரு சிறு செய்தியைக் கூட என்றும் செய்ய முடியாதவனாயும் இருப்பவனைப் புகழ் சேராது. 87 O