உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிரம் 19 4. அறத்தின் வலிமையை வலியுறுத்தல் சிறப்பையும் செல்வத்தையும் ஒருசேர நல்கும் அறத்தை விட உயிர்க்கு நன்மையானது வேறு யாது? 31 ஒருவர்க்கு அறத்தினும் சிறந்த நன்மையும் இல்லை; அவ்வறத்தை மறந்து நெகிழவிடுவதினும் பொல்லாத கடுதியும் இல்லை. 32 அறச் செயல்களை மிகவும் முடிந்த அளவுக்குச் செய்யக் டிடிய வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் விடாது செய்க. るこ மனத்திலே குற்றம் இல்லாதிருத்தல் ஒன்றேகூட முழு அறமாகும் மனத்தில் களங்கமுடன் நல்லன போல் செய்யும் பிற செயல்கள் வெற்று ஆரவாரத் தன்மையனவே. 3.4 பொறாமை, ஆவல், சினம், கொடுஞ்சொல் ஆகிய நான்கு இழுக்குகளுக்கும் இடமின்றிச் செய்வது அறம். ご5 அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்றெண்ணாது இப்போதே அறம் செய்யத் தொடங்கிவிடுக; உடல் அழியும் போது உயிர்க்கு அழியாத் துணை அவ்வறமே. こ6 பல்லக்கு சுமப்பவன், அதன்மேல் ஏறிச் செல்பவன் ஆகியோரிடையே அறத்தின் பயன் வேலை செய்வதை நேரில் கண்டு கொள்ளலாம்; சொல்ல வேண்டிய தில்லை. 37 ஒருவன் எந்நாளையும் வீணாள் ஆக்காது நல்லறம் புரியின், அவ்வறம் அவன் மீண்டும் பிறந்து வாழாதவாறு பிறப்பின் வழியை அடைக்கும் கல்லாகும். 38 அறம் செய்வதால் வரும் பயனே உண்மையின்பம், அல்லாத தீச் செயல்களால் வருவன இன்பத்திற்குப் புறம்பான துன்பங்களே இகழன்றிப் புகழ் தரா. Z9 ஒருவன் என்றும் செய்ய வேண்டியது அறச் செயலே. செய்யாது நீக்க வேண்டியது பழிச் செயல். 4 O