பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 81 35. உலகப் பற்றைத் துறத்தல் எப்பொருளிலிருந்து எப்பொருளிலிருந்து ஒருவன் பற்று நீங்கியிருக்கிறானோ அப்பொருள் அப்பொருள் தொடர்பாக அவன் துன்புறுதல் இல்லை. 3 41 துறவு கொண்டபின் இவ்வுலகில் இயலக் (சாதிக்கக்) கூடிய நற்பணிகள் மிகப் பல; அவற்றை விரும்பினால் உள்ளபடியாகத் துறவு கொள்க. Jo 42 சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐம்புல நுகர்ச்சிகளையும் ஒழித்தல் வேண்டும். உள்ளம் விரும்புகிற எல்லா உலக இன்பங்களையும் ஒருசேரத் துறக்க வேண்டும். 3.43 ஒரு பற்றும் இல்லாமையே நோன்புக்கு உரிய இயல் பாகும் பற்று உடைமையோ, மீண்டும் மீண்டும் உலக மயக்கத்திற்கு இடமாகும். 344 பிறவியை நீக்கப் பாடுபடும் துறவியர்க்கு உடம்பே மிகையான சுமை என்றால், மற்றுமுள்ள உலகப் பொருள்களோடு தொடர்பு கொள்வது ஏன்? S 4.5 இதைச் செய்தவன் யானே, இது என்னுடையதே என்னும் ஈர் அகந்தைகளையும். நீக்கியவன், தேவர்க்கும் கிட்டாதுயர்ந்த வீட்டுலகை அடைவான். 346 பற்றுக்களை இறுகப் பற்றிக் கொண்டு விடாத வரைத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விட மாட்டா. さ47 முற்றத் துறந்தவரே தலைமை நிலையை எய்தியவர் ஆவர்; மற்றையோரோ, பிறவி வலைக்குள் சிக்கியவர் ஆவர். 3.48 பற்று நீங்கிய போதே துறவறம் பிறப்பைப் போக்கும்; மற்றில்லாவிடில், அத்துறவறம் நிலைக்காமல் ஆட்டம் காணப்படும். 349 பற்றற்றவனாகிய கடவுட் பற்றை மட்டும் பற்றிக் கொள்க: அக்கடவுட் பற்றையும், மற்ற உலகப் பற்றுக்களை விடுங் குறிக்கோளுக்காகப் பற்றுக. 350