பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை I47 103. பயன்துக்கார் செய்த உதவி. நயன்துக்கின் நன்மை கடலின் பெரிது பொருள் விளக்கம்: பயன் = புகழ் உரையை தூக்கார்செய்த = சிந்திக்காதவராய் செய்கிற (உதவியை மட்டுமே எண்ணி); உதவி = ஒழுக்கம் சார்ந்த உதவியால் (பெறுகிற) நயன்துக்கின் = மகிழ்ச்சியை ஆய்ந்து பார்த்தால் நன்மை = (தருகிற) அகமும் சமாதானமும் கடலின் பெரிது-மிகுதியிலும் அளவிலாப் பெருமையுடையதாகும். சொல் விளக்கம்: பயன் = சொல்லுரை, புகழுரை: தூக்கார் = சிந்திக்காதவர் நயன் - இன்பம், மகிழ்ச்சி, நன்மை. நன்மை = சுகம், சமாதானம்; கடல் = மிகுதி முற்கால உரை: பின்வரும் பலனை யெண்ணாது, செய்த உதவியின் தன்மை கடலினும் பெரிது என்பதாம். தற்கால உரை: தனக்கு எதிர்காலத்தில் பயன் கிடைக்கும் என்று ஆராயாமல், பிறர்க்குச் செய்த உதவியை ஆராய்ந்து பார்த்தால், அதனால் ஏற்படும் நன்மை கடலை விடப் பெரியதாக இருக்கும். புதிய உரை: செய்கிற உதவியால் கிடைக்கிற புகழுரையை எதிர்பார்க்காமல் ஒருவர் மனப்பூர்வமாகச் செய்கிற உதவியின் மகிழ்ச்சியைப் பார்த்தால், அது தருகிற சுகமும் சமாதானமும் மிகுதியோ மிகுதியாகும். விளக்கம்: கடல் என்றால் ஒர் அளவு உண்டு. எல்லை உண்டு. அதனால்தான் அளவுள்ள கடலைக் கூறாமல், அளவற்ற மிகுதி என்ற சொல்லாக இங்கே அர்த்தம் கொண்டிருக்கிறோம். ஒருவர் பெறுகிற சுகத்திற்கும் மன அமைதிக்கும் அளவுண்டோ! நன்றி செய்கிறவர் நன்றி யறியப் பெறுகிறவர் பெறுகிற இன்பத்தைச் சுகத்தைச் சமாதானத்தை 3 ஆம் குறளில் s விளக்குகிறார் வள்ளுவர்.