பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 201 புதிய உரை: பிறர் வீட்டுப் பொருளை இச்சித்துக் கவர முயல் பவன் மனத்திலும் உடலிலும், எல்லாத் தீச் செயலும் வளர்ந்து அதனால் பெறுகிற கலக்கங்களும் கவலைகளும் அளவின்றிப் பெருகி நிங்காமல் நிலைத்து விடும். விளக்கம்: மனிதனை விட்டு என்றும் பிரியாத பகை உட்பகையும், புறப்பகையும். உட்பகை என்பது மனதில் வருவது. அவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம். உடலில் உள்ள [ 1 ❍ ᎼᏏ பேறு, இழவு, நரை, திரை, மூப்பு, சாக்காடு. பிறர்பொருளைப் பெறுகிற பேராசை பிறந்தவுடனே, உட்பகை உக்கிரமமாக எரிய, வெளிப்பகையும் வேகம் கொள்ள, அந்த ஆசைப்பட்டவன் வாழ்வில் எல்லாப் பகையும் பொல்லா தீச் செயல்களும் அவற்றால் பிறக்கும் பயங்களும், பழிகளும் பெருகிக் கொண்டே வந்து, அவன் அழியும் வரை நீங்காமல் நின்று விடுகின்றன என்கிறார். பிறர் பொருளுக்கு இறப்பான், அவன் அன்றாடம் இறப்பான் என்று பிறனில் விழையும் தவறுக்குக் கிடைக்காத தண்டனைகளையெல்லாம் வள்ளுவர் வகுத்துக் காட்டியிருக்கிறார். 147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன். பொருள் விளக்கம்: பிறனியலான் = அயலான் ஒழுக்கத்திற்குத் துணையிருக்கும் பெண்மை = பெண்ணின் தன்மையை, நயவா இச்சிக்காத தவன் - தவத்தன்மையுடைய ஆண்மகனே அறன் இயலான் - ஒழுக்கம் காக்கும் அறனாக விளங்கி இல்வாழ்வான் என்பான் - இல்லறம் காக்கும் பெருமைக்குரியவன் என்று புகழப்படுகிறான். சொல் விளக்கம்: நயவா - விரும்பாத; தவன் - தவத்தன்மை உடையவன், நாயகன் இயலான் - ஒழுக்கம் உள்ளவன், அறன் - இல்லறவான் முற்கால உரை: அறனாகிய இயல் போடு கூடி இல் வாழ்வான் என்பவன் பிறர்க்குரிய உடமை பூண்ட பெண் தன்மையை விரும்பாதவன்.