பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 211 சொல் விளக்கம்: நிறை = கற்பு, மன ஒருமை, மன உறுதி, மன அடக்கம், நூறுபலம் நீங்காமை = பிரியாமை; போற்றி - துதித்து காத்து ஒழுக = வளர்த்துக் கொள்ளுதல் முற்கால உரை: ஒருவன் சால்புடைமை தன் கணின்று நீங்காமை வேண்டின் பொறை உடைமையைக் தன்கண் அழியாமற் காத்து ஒழுகப்படும். தற்கால உரை: நிறைகுடம் பெருமை நீங்காதிருக்கப் பொறுமையை நடத்தையாகக் கொள்ள வேண்டும். புதிய உரை: மன ஒருமைப்பாடும் உறுதியும் அதனைக் காக்கும் உடலும் எப்போதும் பிரியாது இருக்க விரும்பினால், பெருமையுடைய பொறை உடைமையை துதித்துக் காத்து வளர்த்துக் கொள்ள வேண்டும். விளக்கம்: நிறை என்றால் சால்பு என்றும் சான்றாண்மை என்றும் கூறுவர். இங்கே நான் கற்பு என்கிற கலங்காத உறுதி, இழந்து போகாத மன அடக்கம் என்று பொருள் கொண்டிருக்கிறேன். இதையே உலக வழக்கில் நூறு பலம் என்பார்கள். நூறு பலம் கொண்ட உடலும் வீறுமிக்க மனமும் பிரியாமல் இணைந்து, முனைந்து, மகிழ்ந்து செயல்படுகிற போதுதான் பேராச்சரியம் மிக்க பொறை குணம் பெருகி வளரும். அதனால்தான் பொறை உடைமெய்யை, மதித்து, காத்து, வளர்த்துக் கொள்ள முடியும் என்று மெய்யான உடலுக்கு முக்கியத்துவம் தருகிறார் வள்ளுவர். நூறு பலம் மிக்க உடலில், நூறு பலம் மிக்க மனம் வாழும் என்பதை 4ஆவது குறளில் நிறைவாக விளக்குகிறார் வள்ளுவர். 155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து பொருள் விளக்கம்: ஒறுத்தாரை - தீங்கிழைத்தவரை, தண்டித்து அழித்தவரை ஒன்றாக = தீங்கிழைத்தவருக்கு இணையாகவே