பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 239 176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகி பொல்லாத சூழக் கெடும் பொருள் விளக்கம்: அருள்வெஃகி = கருணையுடன் நல்வினைகளை ஆற்றின் நின்றான் = தொடர்ந்து செய்து வருகிற ஒருவரது கண் = தேகமானது பொருள் வெஃகி = பிறர் பொருளை ஒழுக்கமில்லாது பற்றிக் கொள்ள விரும்புகிற போது பொல்லாத சூழக் = தீமை எல்லாம் ஏற்பட்டு கெடும் - நாசமடையும் சொல் விளக்கம்: அருள் = கருணை, நல்வினை; நின்றான் = தொடர்ந்து நிற்பவன் கண் = உடம்பு, சரீரம், அகக்கண், புறக்கண் கெடும் - நாசமுறும். செயல்கெட்டு அழியும். முற்கால உரை: அருளாகிய அறத்தை விரும்பி அதன் வழியிலே தங்கினவன் பொருளை விரும்பிக் குற்ற வழிகளை எண்ணக் கெடுவான். தற்கால உரை: எவ்வுயிரிடத்தும் அருளை விரும்பி அறவழியில் நின்றவன், பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளை எண்ணினால் கெட்டுப்போவான். புதிய உரை: கருணையுடன் பிறருக்கு நல்லுதவியைத் தொடர்ந்து செய்து வருகிற ஒருவன், பிறர் பொருளைக் கவர எண்ணும்போது அவனது உடல் கொடுமைகளுக்கெல்லாம் ஆளாகி செயல் கெட்டு நாசமடையும். விளக்கம்: 171 வது குறளில் அடுத்தவனது உடைமைக்கு அவாவுகிறவன் உடம்பு ஊனமடையும் என்றார். 176 வது குறளில் மீண்டும் அவாவின் கொடுமையை விளக்க, உடம்பு செயலழிந்து போகும், நாசமடையும், அழியும் என்று ஆணித்தரமாகவே கூறுகிறார். வெஃகுபவர் மனம் வேதனைக்குள்ளும் சோதனைக் குள்ளும் ஆட்படுத்த ஆட்படுத்த, உணவு உறக்கம் குறைய, உணர்வுகள் திணறிப்போக, அவரது இயல்பான செயல்பாடுகள் சீரழியும். உடலோ உருக்குலையும். உணர்ச்சிகள் அகத்தை அழிக்க முகமோ