பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 267 புதிய உரை: நன்மையும் நீதியும் இல்லாததை, அர்த்தமின்றி, பயமில்லாமல், வெறுமனே புகழ்ந்து பேசுகிறபோது, அதுவே குற்றத்தை அதிகமாக்கும். அவன் கூறுகின்றவை எல்லாம், கருத்துக்களாக இல்லாமல், வெறும் கூச்சலாகவே வெளிப்படும். விளக்கம்: பிறருடன் பேசுகிறபோது, பேச வேண்டியதை மட்டும் பேசுவது அறிவுடைமை ஆகும். அதுவும் அறிவாளிகளிடமும், பெரியவர்களிடமும் பேசுகிற போது, மமதையில்லாமலும்; வெற்றுப் பேச்சுப் பேசி, நேரத்தை வீணாக்காமலும், பண்புடன் பேசுவது, புத்திசாலித்தனமாகும். அதிகம் பேசினால் அதுவே துன்பம் என்பார்கள். அதிகம் என்பது அநாவசியம் என்பதையே குறிக்கிறது. பயனான பேச்சு என்பது, பண்புடைமையாகும். - அன்பு, நீதி, இன்பம் பயப்பது போல் பேசுவதையே பயனுள்ள பேச்சு என்பதாகும். மற்றதெல்லாம் பயனிலவாகும். பயனற்ற மொழிகளைப் பேசுவோரை, பயனிலி என்றே குறிக்கின்றார்கள் அதையே, வீணானவன் என்று வெறுப்புடனும் கூறுகிறார்கள். தனது நேரத்தையும் பாழாக்கி, பிறரது நேரத்தையும் வீணாக்கி ப் பேசுகிறபோது, விரும்பத்தகாத சொற்களும் வேண்டத் தகாத கருத்துக்களுமே இடம் பெறும். பொய்யானவற்றை பேசுகிறவர்கள். தன்னைப் புகழ்ந்து தம்பட்டம் அடிப்பதுதான் இயல்பாக விளங்குவதால், அவர்கள் பேசுகிற சொற்கள் மொழியாக இல்லாமல் வெறும் ஆரவாரமாக, வறட்டுக் கூச்சலாகவே வெளிப்படுகிறது என்பதையே வள்ளுவர் உரைக்கும் உரை என்றார். பண்பற்ற பேச்சு, பாழான முழக்கம் சகிக்க முடியாத சத்தமாகவே ஒலிக்கிறது என்பதாக, மூன்றாம் குறளில் வள்ளுவர் பயனற்ற பேச்சின் பரிதாப நிலையை விளக்குகிறார்.