பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/334

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள்-புதிய_உரை - *- - 333 தற்கால உரை: தன்னிடத்துள்ள உணவைப் பகுத்துண்ணும் பழக்க முடையவனைப் பசி என்று சொல்லப்படும் தீய நோய் நெருங்கி வருதலும் இல்லை. புதிய உரை: கஞ்சிச் சோறாக இருந்தாலும், தந்து உண்ணுகிற பண்பாளனை, நரக வேதனை தரும் பசி நோயானது, நச்சுத் தீண்டலைப்போல எதுவும் செய்து விட முடியாது. நெருங்கவும் முடியாது. விளக்கம்: . கறி சோறு கொடுப்பதுதான் கெளரவம். காசு பணம் தருவது தான் குலப்பெருமை. அனைவரும் வியக்கும் வண்ணம், ஆடம்பரமான பொருட்களை அளிப்பதுதான் ஈகைத் தன்மை. என்பதெல்லாம் உலக இயல்பு. மன உலகில் உண்டாகும் மாயை. இங்கே வள்ளுவர், எதார்த்தமான உண்மையை எடுத்துக் காட்டுகிறார். கையிலே ஒன்றுமில்லை. எஞ்சியிருப்பது கஞ்சிசோறுதான் அதாவது தனக்கு மட்டும் தான் இருக்கிறது. இந்த நிலையில் வந்து நிற்கும் பசித்தவரோடு, பகிர்ந்து கொள்ளும் பாங்கு. - அதனால், பசி தீர்ந்து விட வில்லை. பாழும் வயிற்றுக் குள்ளே பொங்கிப்புயலாய் iசி, தனலாய் எரிக்கும் பசியின் நரகக் கொடுமையை, விரட்டி வெற்றிகாண முடிகிறது என்னும் உண்மையை இங்கே குறித்துக் காட்டுகிறார். பசியைத் தீப்பிணி என்கிறார். தீ என்றால் கொடுமையான, நெருப்பான என்று கூறலாம். ஆனால் நரகம் என்றொரு பொருளும் உண்டு. வெறுமையாய்க் கிடக்கும் வயிற்றில் எழுகின்ற பசித்தீயானது, உடலிலே உள்ள உதரத்தீ, சினத்தி, விந்துத்தீ என்னும் மூன்றையும் விட மோசமானது. அந்தப் பசி உணர்வானது, வேட்டையான நச்சுப் பூச்சிகள் உடலைத் தீண்ட, அந்த நஞ்சு உடலெங்கும் ஓடி, உயிரை வதைப்பதுபோல, பசித்தீ உடலைத் தீண்டுகிறது. மனத்தைத் துண்டாடுகிறது. ஆத்மாவை அடங்கச் செய்கிறது. W.