பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இப்படி இரண்டு காடுகள். முதல் வகையான காடு, சாதாரண மனிதர்கள் கூட சமாளிக்க முடியாத கோர நிலை. இரண்டாம் வகை. உடலெங்கும் இரணத்தை ஏற்படுத்தி மரணமே முடிவு என்று வீழ்த்துகின்ற அழிவுக்காடு. இப்படிப்பட்ட காட்டினுள் சென்றால், ஆற்றல் மிக்கவர்கள் கூட அகால மரணத்தையே அடைவார்கள். ஆனால் வல்லவர் என்ன செய்வார்? புதருக்குள்ளே சிதறிப்போவாரா? அடர்ந்த காட்டிற்குள்ளே அழிந்து போவாரா? இல்லை; இல்லை. அவரது ஆற்றல் ஆக்க பூர்வமானது; ஆண்மை மிக்கது. அடர்ந்த காட்டில், அச்சம் ஊட்டுகின்ற மரங்களை அவர் மாற்றிவிடுவார். கல்லால் ஆன ஆலமரமாக அவற்றை மாற்றி உயர்ந்து நிற்பார். இதைத்தான் கல்லால் - கல்லால் ஆன ஆலமரம் என்று வள்ளுவர் கூறுகிறார். ஆலமரம் அழிவதுதான் என்றாலும், அழியாப் புகழ் கொண்டவரின் நிலை, என்றுமே அழியாத கல் ஆலமரம் என்று குறிப்பிட்டு, நீள் புகழ் வல்லார்களுக்கு நித்தமும் வாழ்வுதான். புகழ்தான். அவர்கள் புகழ் அழியாது என்றும் 5 ஆம் குறளில், அழகுற குறித்துக் காட்டுகின்றார். ஏழு சொற்களில் அமைந்துள்ள குறட்பாவில், எத்தனை எத்தனை அர்த்தங்களைப் பொதிந்து வைத்து, வள்ளுவர் விளையாடி யிருக்கிறார் பாருங்கள். 236. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று பொருள் விளக்கம்: தோன்றின் மற்றவர் முன்னே (அறியப்படும்போது) புகழோடு = வெற்றிதரும் அருஞ்செயல் மேன்மையோடு தோன்றுக = வெளிப்பட வேண்டும் அஃதிலார் அப்படிப்பட்ட ஆற்றல் எதுவும் இல்லாதார் தோன்றலின் = அறியப்படுவதைவிட தோன்றாமை = வெளிப்படாமல் இருந்து கொள்வது நன்று = சுகம் தரும்.