பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/356

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 355 தற்கால உரை: புகழ் எனும் வைப்பினைப் பெறா விட்டால், உலகில் வாழ்வோர் எவராயினும், அவர்க்கெல்லாம் பழியாகும் என்று கூறுவர். புதிய உரை: புகழ் எனும் அருஞ்செயலாற்றி, அதைத் தொடர்ந்து வைத்துக் காக்க இயலாதவனை, மக்கள் எல்லோரும் மாமிசப் பிண்டம் என்றே வசைபாடுவர். விளக்கம்: இசை வேண்டும் யாக்கைக்கு. அதைப் பெற வேண்டும் உயிருக்கு. வாழும் காலம் வரை வாழ்ந்து கொண்டிருக்கும் புகழானது. அவர் மறைந்த பிறகும் தொடர வேண்டும். அப்படி வாழ்கிற வாழ்க்கையே அற்புதமான வாழ்க்கையாகும். பிறன் மேல் பொறாமைப் பட்டாலும், பகைமை பூண்டாலும், வெறுத்து ஒதுக்கினாலும், வீறாப்புப் பேசினாலும், ஒருவன் செய்கிற உயர்ந்த காரியங்களை, இந்த ஒன்றா உலகம் புகழும், மகிழும் என்று மூன்றாம் குறளில் கூறிய வள்ளுவர். நிலவரை நீள் புகழ் ஆற்றின் புத்தேள் உலகு ஏற்கும் போற்றும். புகழ் சாற்றும் என்று நான்காம் குறளில் கூறிய வள்ளுவர், புகழ்பெறாத ஒருவனைப் புலவரை என்றார். மாமிச மலை என்று மனம் வருந்திக் கண்டித்த வள்ளுவர், இந்த எட்டாம் குறளில், மாமிச மனிதர்களை, உயிரற்ற நடைவாசிகளை, மிக அற்பமாக, வசை என்று பாடுகிறார். வசை என்றால் இகழ்ச்சி சொல் என்பதைவிட, நிணம் என்ற பொருள்தான், நேரில் வந்து நின்று கொள்கிறது. நிணம் என்றால் மாமிசம், கொழுப்பு என்று பொருள். இசையுள்ளவன் உயிருள்ளவன், உயிர்ப்புள்ளவன். உலகம் மதிக்கத்தக்க அளவுக்குச் செயல் உள்ளவன், சீர்மை நிறைந்தவன். செயல் மறவன். வசையுள்ளவன் உயிருள்ள மாமிசப் பிண்டம். நடமாடும் தேகம் உள்ள தேர்ச்சியில் லாப் பண்டம் (உடல்). அவன் தலையற்றுத் திரியும் முண்டம். இப் படியெல்லாம்