பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/360

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 359 அதனால் தான் வள்ளுவர் வசை ஒழிய என்றார். அதாவது நிணமாகிய மாமிசமானது, சதையாக இருப்பதை ஒழித்து அதாவது சதை தசையாக மாற்றி, சக்தியுடன் விளங்குபவரே, உலகில் பயனுள்ள வாழ்க்கை வாழ்கிறார். பிறர்க்குதவும் பெருமையான காரியங்களையும் புரிகிறார். பூமிக்குப் பெருமையானவராகத் திகழ்கிறார். ஆகவேதான் வாழ்வார் என்றார். அதாவது நிகழ்காலத்தில் வளமாக வாழ்கிறார். எதிர்காலத்தில் இன்னும் மேன்மையாக வாழ்வார். இறந்த காலத்திலும் சிறந்தவராகத் திகழ்ந்தார். ஆனால் இசையில்லாமல், வாழ்கிறவரை வள்ளுவர் தவர் என்கிறார். அவர் வாழ்வதே தவறு என்கிறார். அறிவிருந்தும் அவன் அறிiனன்; சுறுசுறுப்புள்ளவராக இருக்க வேண்டியவன் உடலமைப்பால் மாறிய மந்தன், செல்வ நிதி போன்ற சக்தி மிகுந்த உடலை, உபயோகிக்கத் தெரியாத மதிகேடன். அதனாலே அவன் கீழ் மகன் என்று குறித்துக் காட்டுகிறார் வள்ளுவர். புகழ் அதிகாரத்தில் ஆன்ம வளத்தைக் காட்டினார். உடல் பலத்தைக் காட்டினார். பிறரோடு போராடி புகழ் புரியும் பேராண்மையை விளக்கினார். புதுமை விரும்பும் உலகத்திற்குப் புகழ்தான். பேரமுதம் என்று காட்டியவர், அது இல்லறத்தாரால் இயலும் என்று இல்லறப் பெருமைக்கு மகுடம் சூட்டினார். தொடர்ந்து, புகழ் பெற, வெறும் சதையாலான பிண்டம் உதவாது. கட்டுடல்தான் கைகொடுக்கும். வாழ்வளிக்கும். வாழ்வாங்கு வாழவைக்கும் என்று கூறியதுடன், நல்ல உடல். நல்ல மனம், நல்ல வாழ்வு என்ற தனது கொள்கையை இதுவரை கூறிய இல்லறவியலிலுள்ள 240 குறள்களிலும் வடித்துக்காட்டி வழிகாட்டியிருக்கிறார்.