பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/404

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 403 வெறுப்பின் மேல் நிலைதான் மறுப்பு என்றும் நாம் கொள்ளலாம். ஒருயிரைக் காப்பது என்பது கடினமான காரியம். அழிப்பது என்பது மிகவும் எளிதான வேலை. பானை செய்பவனுக்குப் பல நாள் வேலை. உடைத்துப் போடுபவனுக்கு ஒரு நிமிட வேலை என்பது போல, உயிரைப் படைத்து உயிர்த்துக் காப்பது என்பது சிரமமான பணியாகும். அவற்றை அழித்து ஆனந்தப்படுவது அரக்கத் தனத்தின் உச்சக் கட்டக் கொடுமை என்பதைத்தான், யாது என்னும் சொல்லால் வள்ளுவர் குறித்துத் தந்தார். மற்றவர்கள் தொழுதிட, போற்றி வணங்கிட, ஏற்று மதித்திட வாழ்வது தான் வாழ்வாங்கு வாழ்வதாகும் என்னும் கொள்கை கொண்ட வள்ளுவர், புலால் மறுத்து வாழ்வதே புகழ்தரும் வாழ்வாகும் என்று கொள்கையை நிலைநிறுத்தி முடிக்கிறார்.