பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/437

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


436 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கண்காணிப் பார் யாரும் இல்லையென்று கள்ளம் புரிவோரை, ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்போரை, வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதையரை, வள்ளுவர். மிக அருமையான சொல்லால் குறித்துக் காட்டுகிறார் - வன்கனார் என்று. துறவிகளுக்காகத் தொண்டு செய்யும் பண்பு கொண்ட இல்லறத்தாரையும்; தானம் தந்து புரக்கின்ற தண்மதி கொண்ட கொடையாளர்களையும் ஏமாற்றிப் பெறுவதைத்தான் வஞ்சித்து என்கிறார். வாழ்வார் என்றால் உயிர்வாழ்தல், சீவித்தல் என்று பொருள். அதாவது பலமற்ற உயிர்கள், நலமற்ற உடல்கள், வளமற்ற சீவிகள் எல்லாம், பிறந்ததற்காக வாழ்வதுபோல, பெருமை இல்லாமல் மடிந்து போகும் தன்மைபோல, வஞ்சிக்கும் போலித் துறவியர் உயிர் வாழ்கிறார். அவர் கொள்கையிலும் உயரவில்லை. கோபுரம்போல, பயன்களிலும் உயர வில்லை. பிச்சைச் சோற்றைப் பெரிதாய் எண்ணி, அரிதாய்ப் பெற்ற தவத்தை, தாறுமாறாகப் பயன்படுத்தி, ஏய்த்துப் பிழைக்கிறார்கள், என்றால், அவர்கள் எத்தர்கள் தானே! ஏமாற்றுக்காரர், ஏய்ப்பாளர், தீமைகள் புரியும் வாய்ப்பாளர் என்று சொல்லாமல், கொடுமையான திருடன் (வன்கணார்) என்று கூறுகிற போது, வள்ளுவரின் உள்ளம் புரிகிறது. H கள்ளம் பாய்ந்த நெஞ்சுடன், தவவேடத்தில் வாழ்வார், காட்சிக்கு மட்டும் திருடனல்ல. இறை சாட்சிக்கும் ஈடில்லாத் திருடன்தான் என்று 6 வது குறளில், அற்பாசை கொண்ட பொய்த் துறவிகளின் வாழ்க்கையை அம்பலப்படுத்திக் காட்டுகிறார். 277. புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து பொருள் விளக்கம்: புறம் குன்றி - பொய்த் தவ வேடத்தால் ஏய்த்தும், புறக் கொடை குறைந்து போகிற கண் தனையர் = அளவைக் கண்ட விடத்து அகம் = வேடதாரியின் ஆன்மாவே குன்றி = மனோசிலை எனும் ஓர் கொடிய நஞ்சுபோல, மூக்கில் = ஒர் மருந்தாக உதவி 'கரியார் உடைத்து = கீழ் மக்களாகிய அவர்களை அழித்து விடுகிறது.