பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா / விளக்கம்: பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும். ஒழுக்கத்து நீத்தார் பெருமை என்று குறளைப் பிரித்துப் பார்க்கிறோம். நூல்கள் யாவும் நுண்ணிய மதியாளர் பண்ணிய பண்பாடுகளின் தொகுப்பு. அவை மக்களுக்கு அறிவையும் செறிவையும் ஆழ்ந்த உறவையும் வழிசெல்லும் நெறியையும் வற்புறுத்தும், வழிநடத்தும், தவறுகளுக்குத் தடை விதிக்கும், தான் என்ற செருக்குக்கு விடை கொடுக்கும். i. ஆகவே, நூல்கள் காட்டிய நெறியில் ஒழுக்கத்தில் விழுப்பமாய், செழிப்பாய் வாழ்ந்து நிற்பவர் முற்றுந்துறந்த ஆசைகளை எரித்த ஆற்றலாளர் ஆகிறார். அதுவே அவரது பெருமைக்கு ஆணிவேராய், அணிகலனாய் விளங்குகின்றது. 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று பொருள் விளக்கம்: துறந்தார் = (உடலளவில்) உலகப் பற்றைத் துறந்தவர் பெருமை = வல்லமையின் தகைமையை துணைக் கூறின் = ஒப்புமை கூறி அறிய வேண்டுமானால் வையத்து = இந்த உலகத்து ஆசைகளை உடலாலும் மனத்தாலும் இறந்தாரை = வென்று வாழ்ந்து காட்டுகிறவரை எண்ணிக் கொண்டு = கருத்தில் கொண்டு அற்று = சான்றாக அறிந்து கொள்ளவேண்டும் சொல் விளக்கம்: பெருமை = வல்லமை, சீர்மை, மிகுதி துணை அளவு, ஒப்பு முற்கால உரை: இருவகைப்பட்ட பற்றையும் விட்டாரது பெருமையை இவ்வளவென்று எண்ணால் கூறியறியலுறின் அளவு படாமையான், இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி இத்துணையர் என அறியலுற்றாற் போலும். தற்கால உரை: துறந்தார் பெருமைக்கு அளவில்லை. அதனை அளவிட்டுக் கூறுவதாயின் இவ்வுலகில் இப்பொழுது வரை இறந்துபோனவர்