பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.99 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: செல்வமானது நிலைத்து நிற்காத இயல்பை உடையதாகும். அத்தகைய செல்வத்தை ஒருவன் பெற்றால் செய்யக்கூடிய நிலையான i. i. σοου "ο 22' ) H. i. - அறச் செயல்களை, அவன் பெற்ற அப்பொழுதே செய்ய வேண்டும். புதிய உரை: s * - -- - - - s நிலை இல்லாத வரலாற்றை உடைய செல்வ வாழ்க்கையைப் பெறுகிற ஒவ்வொருவரும், அந்த வாழ்வு நிலைத்து இருக்க வேண்டுமானால் ஒழுக்கத்தை வாழ்நாள் எல்லாம் காக்க வேண்டும். விளக்கம்: உணவின் சுவைக்கு உப்பு தேவை. ஆனால் அந்த உப்பே உணவு ஆகிவிடாது. வாழ்க்கைக்கு செல்வம் தேவை. ஆனால் அந்தச் செல்வமே வாழ்க்கை ஆகிவிடாது. செல்வம் வந்துபோகும் வரலாறு உடையது. இருந்து ஏற்கும் இயல்பு உடையது வாழ்க்கை. அதை மகிழ்ந்து அனுபவிக்கும் இயல்பு உடையது மெய். அந்த மெய்யானது நிலைத்து, நீடித்து, நெறியான இன்பத்தை அளிக்கத்துணையாக நிற்பது ஒழுக்கம். ஒழுக்கமானது வலிமையால் பிறப்பது. ஆகவே, வலிமை சார்ந்த ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தால் வாழ்வும் செழிக்கும். வரலாறும் தழைக்கும் என்று வள்ளுவர். மூன்றாவது குறளில் கூறுகிறார். 334. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் பொருள் விளக்கம்: நாள்என தினம், தினம் புதுமைகளை ஒன்றுபோல் மதிப்பிற்குரியதாக காட்டி = வாழ்க்கை காட்டுகிறபோது அது - அதை உயிர்ஈரும்வாள் - ஆன்மா அறிகிற ஒளியாக உணர்வார் கற்று அறிந்தால் பெறின் பயன்பெறலாம். சொல் விளக்கம்: நாள் - தினம், இளமை, புதுமை, ஆயுள் ஒன்று மதிப்பிற்குரிய, ஒப்பற்ற உயிர் ஆன்மா ஈரும் அறிவு; வாள் ஒளி, கக்கி: உணர்வார் கற்றறிதல்