பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/589

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


588 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா விடுமா? எனவே, இந்தப் புதிய உரை காலத்தின் கட்டாயம். தேவைக்குக் கிடைத்த திறவுகோல். வாழும் மனிதனுக்கு வாய்த்த் வாழ்வியல் வசந்தம். சுவரை வைத்துத்தான் சித்திரம் என்பது போல. ஒருமனிதனுக்கு உடலை வைத்துத் தானே வாழ்வே உருப்பெறுகிறது. சிதைந்த சுவற்றிலே சித்திரங்களா வரைய முடியும்? உடல் நலமின்றேல், உள்ள வாழ்க்கைதான் நலமாகவா இருக்கும்? உடலில்தானே, உள்ளம், ஆன்மா, அறிவு, ஆற்றலெல்லாம் ஒருங்கிணைந்து இருக்கின்றன. எனவே, உடலைக்காக்கும், உபாயங்களை, உள்ளத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை, ஆன்மாவின் மூலம் அறியக் கூடிய அறநெறிகளை, திருவள்ளுவர் தனது திருக்குறளின் மூலம் கூறாமலா குறை வைத்திருப்பார். அவர் சித்தரல்லவா! கூறித்தான் வைத்திருக்கிறார் இலை மறை காயாக. காலங்காலமாக நாம்தான் அவைகளை கண்டுகொள்ளாது இருந்திருக்கிறோம்! 'தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றார் கர்த்தர் இயேசு. உரையாசிரியர், டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள், புதிய கண்ணோட்டத்தோடு திருக்குறளிலே எதையோ தேடியிருக்கிறார். அவர் தேடியதையே கண்ட டைந்திருக்கிறார். அதற்குரிய ஆதாரங்களை ஆய்ந்தறிந்து, சொற்பொருள் விளக்கமென அள்ளித்தெளித்து, தனது கருத்தை நிலை நாட்டியிருக்கிறார். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் இருக்க லாம். புதிய சிந்தனையாளர்களுக்கு இந்நூல் கிடைத்தற்கரிய ஒரு புதையல். 'எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிற திருவள்ளுவரின் குறளுக்குக் கிடைத்த ஒரு நற் சான்று இந்த நலலுரை. இந்தத் 'திருக்குறள் புதிய உரை நூலின் மூலம், தமிழ் இலக்கிய உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிற டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள், அடுத்தடுத்துத் திருக்குறளின், 'பொருட்பால்', 'காமத்துப்பால் போன்ற வைக்கும் புதிய உரைகளை எழுதித், தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க வேண்டு மென வேண்டி, விரும்பி வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். அன்புடன், 'உடற்கல்விக் கலைமாமணி' உலக துரை, விழுப்புரம்.