பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


‘செல்வம் வரும்போது மகிழ்வும், போகும்போது சோர்வும் ஒருவனுக்கு எப்படி உண்டாகும்?’ என்பதைக் காட்ட, நாடகத்தைக் காணவரும் ம க் க ளி ட ம் வரும்போது காணப்படும் மகிழ்வையும், போகும்போது காணப்படும் சோர்வையும் உவமையாகக் காட்டியிருப்பது பெரிதும் நயமுடையதாகக் காணப்படுகிறது.

“நாடகத்தை முன்வைத்து மக்கள் கூடுவதும், பிறகு கலைவதும்போல, ஒருவனது செயலை முன்வைத்துச் செல்வம் சேர்வதும் பிறகு அழிவதும் ஏற்படும்” என்ற கருத்தும் இக்குறளில் புதை பொருளாகப் புதைந்து காணப்படுகிறது.

இக்குறளில் உள்ள ‘போக்கும்’ என்ற சொல்லில் ‘ம்’ ஒன்றிருந்து, ‘போவதும் அப்படியே!’ என்று கூறுவதால், வருவதும் அப்படியே, இருப்பதும் அப்படியே, என்றும் கூறாமற் கூறுவதைக் கண்டு மகிழுங்கள்.

நாடகம் காணவரும்போது மகிழ்வு; காணும்போது இன்பம்; கலையும்போது சோர்வு உண்டாவதுபோல, ஒருவனுக்குச் செல்வம் வரும்போது மகிழ்வும், துய்க்கும் போது இன்பமும், தொலையும்போது துன்பமும் ஏற்படும் என்ற இக்கருத்தும் இக்குறளில் இல்லாம வில்லை.

ஒரே கூத்தாட்டு அவையை, மக்கள் நிறைந்து காணப்படும்போது நிறைந்த செல்வத்திற்கும், குறைந்து காணப்படும்போது குறைந்த செல்வத்திற்கும், கலைந்து போய்விட்ட பிறகு வறுமையின் இருப்பிடத்திற்கும் உவமை காட்டுவது எண்ணி எண்ணி வியக்கக்கூடியதாகும்.

கூத்தாட்டு அவைக்குழாம் என்பது ஒன்றல்ல; இரண்டு. ஒன்று கூத்தாட்டு அவையில் கூடுகின்ற குழாம்; மற்றொன்று கூத்தாட்டு அவையில் நடிக்கின்ற குழாம்