பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

12. மெய்யுணர்தல்.

351. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லா தவர்க்கு.

(இ-ள்) மெய் முதலாகிய பொறிகளைந்தினாலும் அறியப் ப டுவன வெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான்

ஒரு பயனுண் டாகாது, உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு,

(எ-று) .

இது, மெய்யுணர்தல் வேண்டும் என்றது. 1

352. பொருளல்ல வற்றைப் பொனென் றுணரு

மருளானா மாணாப் பிறப்பு.

(இ-ள்) பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம், மாட்சிமையில்லாத பிறப்பு, (எ-று)

இது மெய்யுணருங்கால் மயங்கக் காண்பனாயின்,

பிறப்புண் டாமென்றது.

2

353. எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்1ொருண்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(இ-ள்) யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயிருப் பினும், அப்பொருளினுடைய வுண்மைத் தன்மையைக் காண்பது யாதொன்று அஃது அறிவாம், \எ-று).

மெய்யென்பது உம் அறிவென்பது உம் ஒன்று; என்னை? எக் காலத்தும் ஒரு தன்மையாய் அழிவின்றி நிற்றலின், மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால், அறிவாயிற்று.

இவை மூன்றினானும் உலகத்துத் தோற்றுகின்ற பொருள் களை இந்திரியங்களாற் கண்டு அதன்பின் அப்பொருள்களைக் கண்டவாற்றால் தெளியாது அவையிற்றினது உண்மையைப் போக் கறவாராய்ந்து காண்பது மெய்யென்று கூறப்பட்டது. 3

354. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு.