பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

22. ஊக்கமுடை ைம

இது, பொருட்கேடுவரினுந் தளரா ரென்றது. 8

599. உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து

வள்ளிய மென்னுஞ் செருக்கு.

(இ-ள்) உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மை யு டையே மென்னுங் களிப்பினைப் பெறார், (எ-று).

இஃது, ஊக்க மில்லாதார்க்கு (பொருள்வரவு இல்லையாம்; ஆதலான், அவர் பிறர்க்கு)* ஈயமாட்டாரென்றது. 9

600. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின். (இ-ள்) யானை பரிய உடம்பினதாய்க் கூரிய கோட்டையும் உடையதாயினும், புலி பொருமாயின் அஞ்சம், (எ-று) .

இஃது ஊக்கமில்லாதார் பெரியராயினும் கெடுவர் என்றது. 10

23. மடியின் மை

மடியின்மையாவது சோம்பலின்மை. செய்யுங்க ரியம் ** . [LI T நினைத்தாலும் அதனைச் செய்து முடிக்குங்கால், சோம்பாமை வேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது.

601. மடியை மடியா வொழுகல் குடியைக்

குடியாக வேண்டுபவர்.

(இ-ள்) மடிசெய்தலை மடித்து ஒழுகுக: தங்குடியை உயர் குடியாக வேண்டுவார். (எ-று).

இது, மடியாமை வேண்டுமென்றது. 1

602. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியுந் தன்னினு முந்து.

இருதலைப் பகிரத்துள்ளது மணக்குடவருரை யிற் கண்டது.