பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

4. வினைத்திட்பம்

(இ-ள்) வினை செய்யுங்கால் உறும் துன்பத்தை ஒாார் ஆத லும் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறி யென்று சொல்லுவர்கள் வினையை எண்ணின வர்கள் செய்து முடிக் கும் கோட்பாடு. மனத்திட்பமாவது யாது என்றவர்க்கு அஃது இரண்டுவகைப்படும் என்று கூறிற்று. 4

665. சொல்லுதல் பார்க்கு மெளிய வரியவாஞ்

சொல்லிய வண்ணஞ் செயல்.

(இ-ள்) ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லு தல் யாவர்க்கும் எளியவாம்; அதனைச் சொல்லிய வாற்றால்

செய்து முடித்தல் யாவர்க்கும் அரிய வாம், (எ-று).

மேற்கூறிய இருவகையினும், ஊறு,ஓராது செயலின் வகை

கூறுவார், முற்படச் சொல்லியவாறு செய்ய வேண்டும் என்று கூறி னார். 5

666. கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது

தரக்கங் கடித்து செயல்.

(இ-ஸ்) கலக்கமின்றி ஆராய்ந்து கண்ட வினையிடத்துப் பின் னைத் துளக்கமின்றி, அதனை நீட்டியாது செய்க, (எ-று).

இது, விரை ந்து செய்யவேண்டுமென்றது.

6 67. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்சி

னெற்றா விழுமத் தரும்.

(இ-ள்) ஒரு வினையைத் தொடங்கினால், முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வனாயின், அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும், (எ-று).

சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது, தொடங்கின வினையை முடியச் செய்ய வேண்டுமென்றது. - 7

668. துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி

யின் பம் பயக்கும் வினை.