பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

3. பொருளியல்-1. நாடு

736. பல்குழுவும் பாழ்செய்ய முட்பகையும் வேந்தலைக்குங்

கொல்குறும்பு மில்லது நாடு.

(இ-ள்) பலவாய்த் திரளும் திரட்சியும், பாழ் ஆக்கு உட் பகையும், வேந்தனை யலைக்கின்ற (கொலைத்) தொழிலினை யுடைய குறும் பரும், இல்லாதது நாடு, (எ-று).

பாழ்ஆக்கும் உட்பகையாவது, நாட்டுத் தலைவராயினும் அதிகாரியாயினும் நாட்டைக்கெடுக்குமவர்கள். அவை ஆராய்ந்து கடிய வேண்டுதலின் இது கூறப்பட்டது. 6

737. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா

லாற்ற விளைவது நாடு.

(இ-ள்) பெரும் பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரி தாலோடே மிகவும் விளைவது நாடு, (எ-று).

விரும்பத் தக்கது என்றமையால் பெரும் பொருள் ஆவது நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும் நட்டம். இதுமேல் சொன்னவும் சொல்லாதனவும் தொகுத்துக் கூறிற்று. 7

738. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டிற் றலை.

(இ-ள்) கெடுதலை யறியாதாய்க் கெட்டதாயினும், பயன் குன்றாத நாட்டினையே எல்லா நாடுகளிலும் தலையான நாடென்று சொல்லுவர், (எ-று .

இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் .ெ க ட் ட தாயினும், பின்பும் ஒருவாற்றால் பயன்படுதல் ஆவது தலையான நாடென்றது. 8

739. பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற்

கிறையொருங்கு நேர்வது நாடு.