பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

2. இல்லறவியல் -இல்வா ழ்க்கை

பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை, இனி வாழ்க்கைத் துணை நலங் கூறுகின்றாராகலின், இது பிற்கூறப் பட்டது. 1 {}

2. வாழ்க்கைத் துணை நலம்

வாழ்க்கைத் துணைநலமாவது இல்வாழ்க்கைத் துணையாகிய மனையாளது பெண்மை யிலக்கணங் கூறுதல். இஃது ஈண்டுக் கூறிய தென்னை: மனையாளிலக்கணமாயிற் காமத்துப் பாலுட் கூறற் பாற்றெனின் இது மனையாளாற் செய்யப்படும் தருமமாதலான் ஈண்டுக் கூறப்பட்ட தென்க. இல்வாழ்வார்க்கு மாட்சிமைப் பட்ட மனையாளோடும் வாழ வேண்டுதலின் அதன்பின் கூறப்பட்டது.

51. மனத்துக்க மாண் புடைய ளாகித் தற் கொண்டசன்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை .

(இ-ள்) தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தையுமுடைய ளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினையு முடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள். (எ-று).

இது ஒ ழு க் க மு ம் புகுதிக்குத்தக்க செலவுமுடையளாக வேண்டும் என்றது. 1.

52. மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை

யெனை மாட்சித் தாயினு மில்.

(இ~ள்) குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லை யாயின், அவ் வில்வாழ்க்கை எல்லா நன்மைகளை யுமுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம், (எ-று) .

வருவாய்க்குத் தக்க செலவினளாகவே இல்வாழ்க்கை இனிது நடக்கும். ஒழுக்கக் குறைபாடுண்டானல் வரும் குற்றமென்னை என்றார்க்கு இது கூறப்பட்டது. 2