பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௦௭


இனி, அவ்வகையில் பெருந்தலைச் சாத்தனார் பாடியவை:

“பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின், இழையணிந்து
புன்றலை மடப்பிடி பரிசி லாகப்
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டி ரக்கோன்

(கண்டீரக்கோனை) - புறம் 151: 1 - 6.

ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பில்
ஆம்பி பூப்பத் தேம்பசி புழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழுஉம்தன் மகத்துமுகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந்து இசினே நற்போர்க் குமண
....................................
இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே’

(குமணனை)
- புறம்: 164: 1 - 8, 13.

முற்றிய திருவின் மூவ ராயினும்
பெட்யின்று ஈதல் யாம்வேண் டலமே'
(கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானை)

- புறம்: 205: 1 - 2.

'பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
பெறாது பெய்ரும் புள்ளினம் போலநின்
நசைதர வந்துநின் இசைதுவல் பரிசிலேன்
(மூவன் பரிசில் நீட்டித்தானை)

- புறம் 209, 9 11.

இனி, அவ்வகையில் கோவூர் கிழார் பாடியவை:

'விளங்குதிணை வேந்தர் களந்தொறும் சென்று
புகர்முக முகவை பொலிகென்று ஏத்திக்
கொண்டனர். என்பப் பெரியோர் யானும்