பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௬

முன்னுரை 


முனைந்துவிட்ட தேவைக்காலத்திலும் - இவ் எழுதுபொருள் வசதிப்பாட்டுக்குறை இருந்தகாரணத்தால்தான் - அவ்வுரையுரைப்பின் இடையிடையிலான பல்லிடங்களிலும், “விரிப்பின் பெருகும்” “விரிவஞ்சி விடுத்தாம்!” “வல்லார்வாய்க் கேட்டுணர்க!” - “வந்தவழிக் காண்க!” என்றவாறெல்லாம் உரையாசிரியர்கள் துள்ளிக்குதித்துச் செல்லவேண்டியிருந்தது!

உரிய விளக்கங் குறித்து மாணாக்கர் வினாத் தொடுக்கையில் - தமக்கே விளங்கா நின்ற கருத்து மயக்கங்களைத் தமக்கு முன்னர் இருந்த அம்மாணாக்கர் உணர்ந்துகொண்டு குறைவாக மதிப்பிட்டுத் தாழ்வாகக் கருத இடந்தந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் - ஆசான்மார்இனமே தப்பித்துக்கொள்ள வழிசெய்யும் போக்கு முறைக்கு ஒத்த காப்பு வகையுளொன்றாக “ஆணைகூறல்” (இது - இப்படித்தான்! நான் சொல்கிறேன்! அதற்கும் மேல் கேள்வியே வேண்டா! என்றவாறான போக்கில், “இது என் ஆணை” - என்னுதல்) என்னும் உத்தியும் தோற்றுவிக்கப்பெற்றது! ( காண்க : "முடிந்தது காட்டல், ஆணைகூறல்" தொல். பொருள் 9: 112: 15), இவ்வுத்தியும் - அனைவரும் விளங்க விளங்கிக் கொள்ளும் போக்குக்கு வசதியான உரிய விளக்கவுரை நூல்கள் ( தக்க எழுது பொருள்களின்மைக் குறை காரணமாக) அன்றிலவாயிருந்தமையால் - இலக்கணத்திடையில் துழைத்துத்தீரவேண்டிய தேவையாகவே அன்றிருந்தது!

தமிழரின் வாழ்க்கையுள் அயலவர்கள் - (மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்வதானால்) - ஆரியப் பார்ப்பனர்களாகிய அயலவர்கள் நுழையத் தொடங்கியதிலிருந்து - தமிழ்க்குடி தடுமாறத் தொடங்கியது! பார்ப்பான் வந்ததும் அவனின் அவர்களின் வெண்ணிறத் தோலுக்கும் - உரம்பொலி ஒசைக்கும் பணிந்திசைந்து நின்ற நம் மன்னர் மரபினர் - தமிழ்மானங்கெட்டுத் தகவிழந்திழிந்தனர்: கி.பி. மூன்றாம்நூற்றாண்டுக்குப் பின்னர்த் தமிழகத்தின் ஒட்டுமொத்தச் சூழலே மோசமெய்தி நசிவுறலாயிற்று! ஆறாம் நூற்றாண்டையடுத்து இம் மண்ணில் (இத் தமிழ மண்ணில்) மன்னர்களாக அரசாண்டு வந்த அரகேசரி மாறவர்மன் - குமாராங்குசன் - பாண்டியன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் பரச் சக்ர கோலாகலன் - விஜயாலயன் - வரகுணவர்மன் - ஆதித்தன் - ஜடில பராந்தகன் - பாஸ்கரவர்மன் ஆகிய சிலரின் பெயர்களைப் பார்த்தாலே ஆரியப்பார்ப்பனர் இவர்களின் ஆட்சிகளுக்கிடையே எத்துணையளவுக்கு ஆட்டம் பாட்டங்களையும் நடக்