பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௮௨

முன்னுரை 


மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்'

---தொல் 1098

'சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய
இடித்துரை நிறுத்தலும் அவர தாகும்
கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்'

---தொல் 1100-1101

கிழத்தி


'மடத்தகு கிழமை உடைமை யானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியள்'

---தொல் 1104

காமக் கடப்பினுள் பணிந்த கிளவி
காணுங் காலைக் கிழவோற்கு உரித்தே
வழிபடு கிழமை அவட்கிய லான

---தொல் 1106

'அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே'

---தொல் 1107

'தாய்போற் கழறித் தழீஇக் கோடல்
ஆய்வினைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப
கவவொடு மயங்கிய காலை யான'

---தொல் 11.19

'யாரும் குளனும் காவும் ஆடிப்
பதியிகந்து நுகர்தலும உரிய என்ப'

---தொல் 1137

(இதில் தலைவனும் தலைவியும் ஒப்ப இணைந்து தம் ஊர் விட்டுச் சென்று ஆறும் குளமும் சோலையும் சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்தல் கூறப்பெற்றது. எனவே சம உரிமை உணர்க)

'காமம் சான்ற கடைக்கோட் காலை