பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உஉசு

முன்னுரைஅவ்வாறு ஒருவர்க் கொருவர் சமன்பாடு எய்தி சமநிலை தோன்றி வளருங்கால், இல்லாத ஒருவர்க்கு இருப்பார் ஒருவர் ஈந்து உதவல் வேண்டும் என்னும் உணர்வை வலியுறுத்த ஈகையின் பெருமை கூறும் அதிகாரத் தையும்,

அவ் வீகையுணர்வின் அடிப்படையிலேயே ஒருவர்க்குப் புகழ் கிட்டும் என்பதையும், அப் புகழ்பெறும் நோக்கில் வாழ்ந்து போவதே வாழ்க்கையின் நோக்கம் என்பதையும் தெளிவிப்பான் வேண்டி, இல்லறவியலின் இறுதியாகப் புகழ் அதிகாரத்தையும் அறிவு நூலில் பண்புணர்வு மணிகளைக் கோத்து, வெற்றி மணிமாலையாக, விறலும், திறலும் விளங்க நமக்களித் தார் என்க.

- என்றிவ்விவ்வாறு திருவள்ளுவப் பேராசிரியர் இருள் தீரவும் மருள் நீங்கவும் அஃகியகன்ற தம் அறிவால், வெஃகி வெறிய செய்யும் இம்மக் களினத்திற்குத் தக்கவொரு வாழ்வியல் நூலைத் தந்தளித்தார் என்க.

இவ் வகையில், இன்னென்றையும் நாம் இவ்விடத்தில் கூற வேண்டி யுள்ளது. அதிகாரங்கள் அவர் அமைத்தனவா, நிரல்நிறை அவர் செய்ததா, அதிகாரத் தலைப்புகள் அவர் கொடுத்தவையா - முதலிய பற்பல ஐயப்பாடுகள் இக்கால் எழுப்பப்பெறுகின்றன. அவர் பிறப்பு, பெயர், குடும்ப வாழ்க்கை, தொழில், வாழ்விடம், பிறருடன் ஈடுபாடு - முதலிய வற்றுள்ளும் அவ்வையப்பாடுகள் பரவிவிரிந்துள்ளன. அவ்வகையில் திருக்குறளே ஒருவரால் எழுதியிருத்தல் முடியாது. பலபேர் எழுதி ஒருவர் தொகுத்திருக்க வேண்டும் என்று கூறும் அளவில் அவ்வையம் விரிவடைந்திருக்கிறது. ஆனால், இத்தகைய ஐயப்பாடுகளுக்கெல்லாம் தீர்வு காணல் இயலாது, கடினம்; மிகக் கடினம். வேண்டுமானால் அவரவர் மனப்பாங்கிற்கும், அறிவுணர்வுக்கும் ஏற்ப அவரவர் ஒவ்வொரு முடிவைக் கொண்டு கொள் ளலாம். அவற்றைத் தடுக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது. இது இறை இருக்கிறது இல்லை என்பது போலும் ஒரு கருத்துப் போராட்டம் போன் றது. இதற்கு முடிவேது?

ஆனால், பெரும்பாலும் இவ்வதிகாரப் பெயர்களும், அவற்றின் வரிசையும் கூடிய மட்டில் மிகவும் பொருத்தமாகவும், சரியாகவும், நிரல் நிறையாகவுமே அமைக்கப் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. புதல்வரைப் பெறுதல் என்னும் ஒர் அதிகாரப் பெயரே பரிமேலழகரால் தந்திருக்கப் படல் வேண்டும் என்னும் கருத்தையும் முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.

மற்றபடி, பிற அதிகாரங்களின் பெயர்ச்சிறப்பாலும் கட்டமைந்த சொல் லாட்சியாலும், நுண்பொருள் விளக்கத்தாலும், உரையாசிரியர் புரிமேலழகரின் பின்வரும் கூற்றாலும், அதிகாரத் தலைப்புகள் நூலாசிரியர் இட்டதாகவே இருக்கக் கூடும் என்று கருத முடிகின்றது.