பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௨௯2. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும் -138

3. இணைமுறை: (இரண்டு கருத்துகளை ஒன்றோடொன்று இணைத்துக் கூறுவது)

1.அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பதில்லாயின் நன்று -4

2.தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் -63

4. எடுத்துக்காட்டு முறை: (பொருந்திய எடுத்துக்காட்டுகளால் பொருளை விளங்க வைக்கும் முறை)

1. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் -27

2. பிலியெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் -475

5. வினாமுறை: (வினாவொன்று எழுப்பி விளங்க வைக்கும் முறை)

1. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் -2

2. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன் -46

திருக்குறளில் ஏறத்தாழ தொண்ணுாறு இடங்களில் வினா முறையை கையாள்கிறார் எனலாம்.

6. வினாவிடை முறை: (வினாவைக் கேட்டு அதற்கு விடையும் கூறி ரிளங்க வைக்கும் முறை)

1.நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார் -149

2.அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் -178

7. நயப்பு முறை: (பிறர் விரும்பி விழைந்து கேட்கும் படி கூறுதல்

1.குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர் -66